குளிர்காலத்தில் உதவி கரம் நீட்டும் கருப்பு மிளகு- யாரெல்லாம் சாப்பிடலாம்?
பொதுவாக கோடைக்காலம் சென்று குளிர்காலம் வரும் பொழுது சிலருக்கு உடல்நல பிரச்சினைகள் வாய்ப்பு உள்ளது. ஏனெனின் காலநிலை மாற்றத்தினால் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாகும்.
இந்த சமயத்தில் மருந்து மாத்திரைகளை நம்புவதை விட உணவில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். சமையலறையில் சாதாரணமாக நாம் பார்க்கும் பொருட்கள் கூட எமது உடலில் பாரிய மாற்றத்தை கொண்டு வரும்.
அந்த வகையில், ரசம், தொக்கு, சட்னி செய்யும் பொழுது காரத்திற்காக பயன்படுத்தும் கருப்பு மிளகில் ஏகப்பட்ட சத்துக்கள் உள்ளன. இவை உடலில் இருக்கும் நாள்ப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வாக பார்க்கப்படுகிறது.
வெறும் சமையலறை மசாலாவாக பார்க்கப்படும் மிளகு ஆயுள்வேத மருத்துவத்தில் முக்கிய பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
"மசாலாப் பொருட்களின் ராஜா" என அழைக்கப்படும் கருப்பு மிளகை சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள் கிடைக்கப்போகிறது என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

கருப்பு மிளகு பலன்கள்
1. குளிர்காலத்தில் சிலருக்கு ஊட்டசத்துக்கள் உறிஞ்சப்படுவது குறையும். அந்த சந்தர்ப்பத்தில் மிளகு தட்டிப்போட்டு ரசம் வைத்துக் குடித்தால் உடலுக்கு தேவையான வெப்பமேற்றப்பட்டு, இந்த செயன்முறை சீர்ப்படுத்தப்படும். இதனால் சளியை எதிர்த்து போராட ஒரு சக்தி உருவாகும்.
2. கருப்பு மிளகு சாப்பிடும் பொழுது உடலுக்கு இயற்கையாக ஒரு வெப்பம் இருக்கும். அப்போது செரிமான நொதிகள் தூண்டப்பட்டு, செரிமானம் ஊக்கவிக்கப்படுகிறது. வீக்கம், வாயு மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளும் நாளடைவில் குறையும். செரிமானத்திற்கு இலகுவான உணவுகளை எடுத்துக் கொள்வது மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளை குறைக்கும்.

3.முக்கிய மூலிகையாக பார்க்கப்படும் கருப்பு மிளகு வளர்சிதை மாற்றத்தை தூண்டுகிறது. இது கொழுப்பை கரைத்து உங்களின் உடல் எடையை குறைக்கிறது. கலோரிகள் அதிகமாக எரிக்கப்படுவதால் உடல் ரீதியிலான செயல்பாடு குறையும் சமயத்திலும் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்கிறது.
4. சுவாசிப்பதில் சிரமப்படுபவர்கள் கருப்பு மிளகு போட்டு ரசம், டீ செய்து குடிக்கலாம். இதிலுள்ள வேதிப்பொருட்கள் சளிக்கு உடனடி நிவாரணம் கொடுக்கிறது. சுவாச பாதையில் உள்ள சளி தொல்லையும் படிபடியாக குறைய ஆரம்பிக்கும்.

5. கருப்பு மிளகில் உள்ள இயற்கையான வேதிப்பொருட்கள் மூளையை சுறுசுறுப்பாக்குகிறது. இதனால் குளிர்காலத்தில் வரும் மன அழுத்தம் குறைக்கப்படும். மந்தனமான நிலை மாறி நீங்கள் சுறுசுறுப்பாக வாய்ப்பு உள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |