சப்பாத்தி சுடும் போது அதில் நெய் தடவுவதன் அவசியம் என்ன? இது தெரியாமல் இருக்காதீங்க
இந்திய உணவுகளில் பெரும்பாலும் நெய் இல்லாமல் இருக்காது. அந்தளவு நெய் முக்கியம் பெறுகின்றது.
இந்திய சமையலறைகளிலும் எது இல்லாவிட்டாலும் நெய் கண்டிப்பாக இருக்கும். ஏனெனின் இந்திய உணவுகளான சப்பாத்தி, தோசை ஆகியவற்றில் கண்டிப்பாக நெய் ஊற்றுவார்கள். அத்துடன் இனிப்பு பலகாரங்கள் செய்யும் பொழுதும் நெய் சேர்ப்பார்கள்.
அதிலும் குறிப்பாக சப்பாத்தியை அடுப்பில் போட்டவுடன் அதற்கு மேல் ஒரு தேக்கரண்டி அளவு நெய் ஊற்றுவார்கள்.
இது சப்பாத்தியின் சுவையை மேம்படுத்துவதை விட ஆரோக்கிய பலன்களையும் கொடுக்கின்றது.
செரிமானம் முதல் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு வரை நெய் ஆதிக்கம் செலுத்துகின்றது.
அந்தவகையில், சப்பாத்தியில் நெய் தடவுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
சப்பாத்தியில் நெய் ஊற்றுவதால் கிடைக்கும் பலன்கள்
1. நெய் சாப்பிடுவதால் குடல் இயக்கம் பராமரிக்கப்படுகின்றது. அத்துடன் நெயில் இருக்கும் ப்யூட்ரேட் என்பது குடல் சுவரை வலுப்படுத்துகின்றது. அத்துடன் குடலில் இருக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியையும் மேம்படுத்துகின்றது.
2. சப்பாத்தி மீது நெய் தடவப்படும் போது, செரிமான அமைப்பு பலப்படுத்தப்படுகின்றது. மலச்சிக்கல் பிரச்சினையுள்ளவர்கள் நெய் கலந்த உணவுகளை அடிக்கடி எடுத்துக் கொள்வது சிறந்தது.
3. கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களை உறிஞ்சுவதற்கு நெய் உதவியாக இருக்கின்றது. அதிலும் குறிப்பாக வைட்டமின்கள் ஏ, டி, ஈ மற்றும் கே ஆகியவற்றை கூறலாம். இவை உடலின் இயக்கத்திற்கு தேவைப்படும் வைட்டமின்களாகும்.
4. மற்ற சமையல் எண்ணெய்கள் போல் அல்லாமல் நிறைவுற்ற கொழுப்புகள் நெய்யில் உள்ளன. சப்பாத்தியில் ஊற்றி காலையில் சாப்பிடும் பொழுது வளர்சிதை மாற்றம் அதிகரிக்கின்றது. எனவே இந்த கொழுப்புகள், மிதமான அளவில், ஆற்றலை வழங்குகின்றன.
5. இந்திய உணவுகளில் ஒன்றான சப்பாத்தியில் நெய் ஊற்றி சாப்பிடும் பொழுது பதப்படுத்தப்பட்ட எண்ணெய்களில் காணப்படும் ஆரோக்கியமற்ற டிரான்ஸ் கொழுப்புகள் இல்லாமல் ஆரோக்கியத்தை தரும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |