வாரம் ஒருமுறை பச்சைப்பயிறு சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? எக்கசக்கமான நன்மைகள் இருக்காமே..
பொதுவாக அனைத்து வீடுகளிலும் இருக்கும் அத்தியாவசிய பருப்புகளில் ஒன்று பச்சைப்பயறும் ஒன்று.
இது இந்தியா போன்ற நாடுகளில் உணவு வகைகள் சமைக்கும் பொழுது பிரபலமான பருப்பை வகையாக பார்க்கப்படுக்கின்றது.
பச்சைப்பயறு பருப்பில் புரதம், நார்ச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன.
அத்துடன் இந்த பருப்பில் பல ஆரோக்கிய நன்மைகள் இருப்பது மட்டுமல்லாது குளிர்காலத்தில் உங்களை சூடாக வைத்திருக்கவும் உதவும்.
இது போல் என்னென்ன நன்மைகளை தன்னுள் ஒழித்து வைத்திருக்கின்றது என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.
அடிக்கடி பச்சைப்பயறு சாப்பிட்டால் என்ன நடக்கும்?
1. பச்சை பயற்றில் நார்ச்சத்து மற்றும் பொட்டாசியத்தின் மூலக்கூறுகள் அதிகமாக இருப்பதால் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
2. பச்சைப்பயிரில் கொழுப்பு மற்றும் சோடியம் குறைவாக உள்ளது, ஆகவே எடை அதிகரிப்பு பயம் வேண்டாம். யாரு வேண்டுமென்றாலும் வயிறு நிறைய சாப்பிடலாம்.
3. புரோட்டீன் தசை வெகுஜனத்தை உருவாக்கவும் பராமரிக்கவும் உதவுகிறது, இதனால் டயட்டிலிருந்து எடையை குறைக்க நினைப்பவர்கள் தாராளமாக சாப்பிடலாம்.
4. செரிமான பிரச்சினையுள்ளவர்கள் காலையில் தினமும் பச்சைப்பயறு சாப்பிட வேண்டும். இதிலுள்ள நார்ச்சத்துக்கள் ஃபைபர் செரிமான அமைப்பை செயற்படுத்த உதவியாக இருக்கும்.
5. சர்க்கரை வியாதியுள்ளவர்கள் பச்சை பயறு சாப்பிட்டால் உடலுக்கு அவ்வளவு நல்லது. ஏனெனின் கிளைசெமிக் இண்டெக்ஸ் (ஜிஐ) பச்சைப்பயற்றில் உள்ளது. இது இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை கட்டுபாட்டில் வைக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |