காலிஃபிளவர் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?
ஒவ்வொரு வகையான காய்கறிகளிலும் ஒவ்வொரு வகையான சத்துக்கள் அடங்கியுள்ளது. அன்றாடம் நாம் ஒரு காய் கீரை வகைகளை எடுத்துக்கொண்டாலே பல நோய்களை விரட்டியடிக்கலாம். அந்த வகையில், காலிஃபிளவர் பூ-வில் அடங்கியுள்ள எண்ணற்ற சத்துக்களை பற்றி இப்பதிவில் தெரிந்துகொள்வோம்.
காலிபிளவர் வகையானது ஒரு பூ வகையை சேர்ந்தது, இந்த பூ-வில் கலோரி குறைந்த உணவுப் பண்டம். கொழுப்புகள் இல்லை. 100 கிராம் காலிபிளவரில் மட்டும் 42.5 மில்லிகிராம் `வைட்டமின் சி' அடங்கியுள்ளது.
இன்டோல் 3 கார்பினோர், சல்பராபேன் போன்ற அரிய சத்துக்கள் இதில் அடங்கி உள்ளது. காலிபிளவர் ஆண், பெண் உயிரணு மற்றும் கருவியல் சார்ந்த தேவைகளுக்கு அத்தியாவசியமானவை.
மேலும் புற்றுநோய்க்கு எதிராக செயல்படுகிறது. இதையடுத்து, வைட்டமின்கள் பி5, பி6, பி1, தாது உப்புக்களான மக்னீசியம், தாமிரம், கால்சியம், பொட்டாசியம் என எண்ணிலடங்கா அத்தியாவசிய சத்துக்களும் காலிபிளவரில் அடங்கி இருக்கின்றன.
மேலும், காலிபிளவர் கருவில் உள்ள குழந்தையின் மூளை, முதுகுத்தண்டு வளர்ச்சிக்கு உதவுகிறது. மூட்டு வலியை குறைப்பதில் காலிபிளவர் முக்கிய இடம் வகிக்கிறது.
விளக்கெண்ணெய்யுடன் காலிபிளவர் இலை பசையை சேர்த்து நன்றாக வதக்கி பத்தாக போட்டு துணிகட்டி வைத்தால் வலி, வீக்கம் சரியாகும்.
காலி பிளவரில் சாம்பார், பொறியல், குருமா என கறி வகைகள் செய்து சாப்பிடலாம். பக்கோடா செய்து சாப்பிட்டால் மொறுமொறுவென்று சுவையாக இருக்கும்.