சர்க்கரை அளவை எப்படி பாகற்காய் கட்டுபடுத்து- ன்னு தெரியுமா? இனி தெரிஞ்சிக்கோங்க!
பொதுவாக நாம் கசப்பு என ஒதுக்கும் பாகற்காயில் பொட்டாசியம், விட்டமின் சி ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன.
இது உடலுக்கு சக்தி வாய்ந்த ஆக்ஸிஜனேற்றங்கள் இருப்பதால் உடலின் வீக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்து போராட உதவுகின்றது என மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.
கசப்பான இந்த பாகற்காயில் அதிகமான மினரல்கள், ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் சர்க்கரை நோயாளர்கள் அவர்களின் மருந்துகளுக்கு பதிலாக இதனை எடுத்து கொள்கிறார்கள்.
அந்த வகையில் பாகற்காய் எப்படி சர்க்கரை வியாதியை கட்டுபடுத்துகின்றது என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
பாகற்காயில் இருக்கும் மருத்துவ நன்மைகள்
1. பாகற்காய் சாப்பிடுவதால் இரத்தத்தின் சர்க்கரை அளவு கட்டுபடுத்தப்படுகின்றது. அத்துடன் இது இன்சுலின் உற்பத்தியை அதிகரித்து குளுக்கோஸ் அளவை குறைக்க உதவுகிறது.
2. இதயம் சார்ந்த நோயுள்ளவர்கள் தாராளமாக பாகற்காயை சாப்பிடலாம். அத்துடன் மாரடைப்பு, பக்கவாதம் நோய் அபாயம் பாகற்காய் சாப்பிடுபவர்களுக்கு சற்று குறைவாக தான் இருக்கும்.
3. பாகற்காயில் அதிகமான நார்ச்சத்துக்கள் இருப்பதால் எடை இழப்பிற்கு பெரிதும் உதவியாக இருக்கின்றது. பாகற்காய் சாப்பிட்டால் இலகுவில் சமிப்பாடு அடையாது. ஆகவே பசி என்பது குறைவாக தான் இருக்கும்.
4. மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, வயிற்று மந்தம் உள்ளிட்ட பிரச்சினைளுக்கு பாகற்காய் உடனடி தீர்வு தரும். தொடர்ந்து குடல் ஆரோக்கியமும் மேம்படுத்தப்படுகின்றன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |