நீரிழிவு நோயாளிகள் கட்டாயம் சாப்பிட வேண்டிய மீன்! தாறுமாறாக எகிறும் நோய் எதிர்ப்பு சக்தி
அசைவ பிரியர்களின் உணவுப் பட்டியலில் முதலிடம் இருப்பது மீன் வகைகள் தான். கடல் உணவுகள் என்றாலே சுவைக்கு பஞ்சமே இருக்காது.
பலவிதமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படும் கடல் மீன்களில், ஒவ்வொரு மீனுக்கு தனித்தனியான குணாதிசயங்கள் இருக்கும். அந்த வகையில் மத்தி மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மையை தெரிந்து கொள்ளலாம்.
மத்தி மீன்
மீன் வகைகளில் மிகவும் சுவை மிகுந்தது மத்தி மீன். தமிழ்நாட்டு கடலோரப் பகுதிகளில் அதிகமாக கிடைக்கின்ற மீன்களில் இதுவும் ஒன்று. மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதில், இதன் பங்கு மிக அதிகம்.
மத்தி மீனின் நன்மைகள்
மத்தி மீன் விலை குறைவாக இருப்பதுடன் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் இதில் இருக்கின்றது. ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இதில் அதிகமாக இருப்பதால் இதய பாதிப்பிலிருந்து பாதுகாக்கின்றது.
அயோடின் கலந்த தாதுச்சத்து இருப்பதால், இவை முன் கழுத்து கழலை நோய் ஏற்படுவதை தடுக்கின்றது.
நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள், ஆஸ்துமா, தோல் நோய்கள், மன அழுத்தம் இந்த பாதிப்புகளை குறைக்கின்றது.
மத்தி மீனை அடிக்கடி உணவில் எடுத்துக்கொண்டால் கண் பார்வை குறைவாடு நீங்கி பார்வைத் திறனை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
அதே போன்று நீரிழிவு நோயாளிகள் இந்த மீனை வாரத்திற்கு இரண்டு முறை சாப்பிட்டால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன், சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.
கால்சியம் சத்து அதிகமாக இருப்பதால் எலும்புகளையும், பற்களையும் வலுவடையச் செய்கின்றது. கர்ப்பிணி பெண்களுக்கும் சிறந்த உணவாக மத்தி மீன் இருக்கின்றது.