வெண்டைக்காய் இப்படி தண்ணீரில் ஊற வச்சு குடிச்சா சுகர் குறையுமா?
தற்போது சியா விதை தண்ணீரில் போட்டு (Chia Seed Water) என குடிப்பது பிரபலமாக இருக்கிறது.
மாறாக சமீப நாட்களாக வெண்டைக்காய் மற்றும் சியா விதைகளை தண்ணீரில் போட்டு குடிப்பது உடலுக்கு பல்வேறுப்பட்ட ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.
அந்த வகையில் சியா விதைகள் போட்டு தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் பலன்கள் பற்றி தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
சியா விதைகள் போட்டு தண்ணீர் குடிப்பதால் இவ்வளவு பலன்களா?
1. வெண்டைக்காயில் வைட்டமின் ஏ, சி மற்றும் கே, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. அதில் சியா விதைகள் சேர்த்து சாப்பிடும் பொழுது ஃபைபர் சத்து, புரோட்டின், ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கிடைக்கின்றன.
2. வெண்டை விதை மற்றும் சியா விதை இரண்டும் ஹைட்ரேட்டிங் ஏஜென்ட்ஸ் ஆகும். சியா விதைகள் தண்ணீரை உறிஞ்சி, எலக்ட்ரோலைட்டுகளைத் தக்க வைக்கிறது. இதனால் செரிமான பிரச்சினை வருவது குறைவாக இருக்கும்.
3. வெண்டை மற்றும் சியா விதைகள் இரண்டின் கலவையும் அதிக நார்ச்சத்து கொண்டவை. இந்த தண்ணீர் குடிப்பதால் குடலில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்களை ஆதரிக்கவும், ஒட்டுமொத்த செரிமான செயல்பாட்டை மேம்படுத்தவும் செய்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |