பிடிவாதமான தொப்பையை குறைக்க வேண்டுமா? கறிவேப்பிலை செய்யும் அற்புதம்
தொப்பையால் அவதிப்படுகிறவர்கள் கறிவேப்பிலையை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
இன்று பலரின் பெரிய பிரச்சினையாக இருப்பது தொப்பை தான். இதற்கு பல உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால் நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவு கூட வயிற்றில் இருக்கும் கொழுப்பை கரைக்கும் தன்மை உடையது.
அதில் ஒன்று தான் கறிவேப்பிலை. தாளிப்பதற்கு மட்டும் நாம் பயன்படுத்திவிட்டு, பின்பு தூக்கி போடும் கறிவேப்பிலை பல அதிசயங்களை செய்கின்றது.
குறிப்பாக பிடிவாதமாக இருக்கும் தொப்பையை குறைக்கவும் அதிக பயன்படுகின்றது.
கறிவேப்பிலையின் சத்துக்கள்
கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி மற்றும் ஈ மற்றும் ஏராளமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், அதிக அளவு தாமிரம், இரும்பு மற்றும் நார்ச்சத்து உள்ளது.
பயன்கள் என்ன?
கறிவேப்பிலையானது செரிமானத்தை மேம்படுத்துவதுடன், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கின்றது.
மேலும் உடம்பில் உள்ள நச்சுக்கள் நீக்கி கொழுப்பையும் கரைக்கின்றது. வயிற்றுக்கு குளிர்ச்சியையும் அளிக்கின்றது.
உடல் பருமன் மற்றும் அழற்சி உணவு குறைவதுடன், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு பயனுள்ளதாகவும் இருக்கின்றது.
கறிவேப்பிலையை எவ்வாறு சாப்பிடுவது?
வெறும் வயிற்றில் 3 அல்லது 4 கறிவேப்பிலையை மென்று சாப்பிடுவது நல்ல பலனை கொடுக்கும்.
குறைவான தண்ணீர் கலந்து சாறு போன்று மிக்ஸியில் அடித்து குடிக்கலாம்.
தண்ணீருடன் 10 அல்லது 15 கறிவேப்பிலையை சேர்த்து கொதிக்க வைத்து பின்பு அதனை வடிகட்டி தேன், எலுமிச்சை சாறு கலந்து குடிக்கவும்.
10 அல்லது 15 கறிவேப்பிலை மற்றும் சிறு துண்டு இஞ்சியை தண்ணீரில் கொதிக்க வைத்து பின்பு வடிகட்டி அதனுடன் எலுமிச்சை மற்றும் தேன் கலந்தும் குடிக்கலாம்.
image: istockphoto.com
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |