மின்னல் வேகத்தில் தொப்பை இறக்கி சிலிம்மாக மாற்றும் பானங்கள்!
பொதுவாக தற்போது குணமாக்க மிகவும் கஷ்டமாகும் இருக்கும் உடல்நல பிரச்சினையில் ஒன்று தான் தொப்பை.
இதனை எப்படியாவது குறைந்து விட வேண்டும் தான் அனைவரும் நினைப்பார்கள்.
அந்த வகையில் வீட்டிலுள்ள சில மூலிகைப் பொருட்களை கொண்டு பானங்கள் செய்து தொடர்ந்து குடித்து வந்தால் கூடிய விரைவில் குறையும் என மருத்துவர்கள் சிபாரிசு செய்துள்ளார்கள்.
இதனை தொடர்ந்து அப்படியான பானங்கள் என்ன என்ன என்பதனை தெரிந்து கொள்வோம்.
தொப்பை இறக்கும் பானங்கள்
1. ஆப்பிள் சைடர் வினிகர்
ஆப்பிள் சைடர் வினிகரை தண்ணீருடன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் தொங்கி கொண்டிருக்கும் தொப்பை தடம் தெரியாமல் மறைந்து விடும். மேலும் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவும் கட்டுப்படுத்தப்படும்.
2. க்ரீன் டீ
பொதுவாக கீரின் டீ குடித்தால் எடை குறையும் என்று கூறுவார்கள். இதற்கு முக்கிய காரணம் க்ரீன் டீயில் ஏராளமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இருக்கின்றது. மேலும் இதில் கேட்சின் (catechin) எனப்படும் ஒரு பதார்த்தம் உள்ளது. இது தொப்பை இறக்கி உங்களை சிலிம்மாக மாற்றும்.
3. ஜீரா டீ
உடலில் என்ன சாப்பிட்டாலும் கொழுப்பு சேராமல் சீரகம் கலந்த தண்ணீர் தடுக்கின்றது. இதனால் இரவில் ஊற வைத்த சீரக தண்ணீரை காலையில் குடிக்கலாம். மேலும் இதனை டீயாகவும் செய்து குடிக்கலாம்.
நீரழிவிற்கு இது நல்ல மருந்து. அத்துடன் உடலின் மெட்டபாலிசத்தை அதாவது செரிமானத்தை அதிகரிக்கவும் சீரக தண்ணீர் உதவுகின்றது.