கொரோனா வைரஸின் 3வது அலை ஆரம்பம்... உண்மையை ஒப்புக்கொண்ட நாடு
பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் 29 ஆயிரம் பேருக்கு மேல் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. சீனாவின் வுகான் நகரில் 2019ம் ஆண்டு முதன் முதலாக வெளிப்பட்ட கொரோனா வைரஸ், இன்னும் கட்டுக்குள் வராமல் அடுத்தடுத்து, தனது பரிமாணத்தினை மாற்றிக்கொண்டு இரண்டாவது மற்றும் மூன்றாவது என மக்களை அச்சுறுத்தும் வகையில் பரவி வருகின்றது.
தடுப்பூசி போடும் பணி ஒரு பக்கம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. எனினும் வைரஸ் பரவல் கட்டுக்குள் வராமல் அதிகமாக பரவி வருகின்றது. இந்நிலையில், பிரான்சில் கொரோனா வைரசின் 3-வது அலை பரவியிருப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
கடந்த நவம்பர் மாதத்திற்கு பிறகு முதல் முறையாக கடந்த 7 நாட்களாக புதிய கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருவதாக பிரான்சு அரசு அறிவித்துள்ளது.