ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்பவரா நீங்கள்? அப்போ இந்த உணவுகளை எடுத்துக்காதீங்க
இன்றைய இளைய தலைமுறையினர் உடம்பை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்தற்கு ஜிம்மிற்கு செல்வதுடன், கடுமையான உடற்பயிற்சியையும் மேற்கொண்டு வருகின்றனர்.
உடம்பை கட்டுக்காப்பாக வைத்துக் கொள்வதற்கு உடற்பயிற்சியுடன் உணவும் மிக முக்கியம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அதே போன்று உடற்பயிற்சி செய்யும் போது, வாயுத் தொல்லையோ? வயிறு வீக்கமோ? இளைப்பாறுவதோ? இவ்வாறான நிலையினை நீங்கள் சந்தித்தால், உடற்பயிற்சிக்கு முன்பு நீங்கள் எடுத்துக்கொண்ட உணவு முறையே காரணமாகும்.
image: shutterstock
உடற்பயிற்சிக்கு முன்பு சாப்பிடக்கூடாத உணவுகள்
உடற்பயிற்சி செய்வதற்கு ஜிம்மிற்கு செல்வதற்கு 2 மணி நேரம் முன்பு நீங்கள் நார்ச்சத்து உணவுகளை எடுத்துக்கொள்ளக் கூடாது. நார்ச்சத்து உணவுகள் மேலே கூறப்பட்ட இடையூறுகளை ஏற்படுத்தும்.
ஆளிவிதை, காய்கறி சாலட், வேக வைத்து சாப்பிடும் நார்ச்சத்து உணவுகள் என இவற்றினை தவிர்த்து விட வேண்டும்.
உடற்பயிற்சி முன்பு என்ன உணவு எடுத்துக் கொள்ளலாம்?
உடற்பயிற்சி செய்யும் முன்பு உடம்பிற்கு புரதச் சத்து மிக முக்கியமாகும். புரதம் குறைவாக இருந்தால் இரத்த சர்க்கரையி் அளவு வேகமாக குறைவதுடன், சோர்வடையவும் செய்கின்றது.
எனவே கார்போ ஹைட்ரேட் மற்றும் புரோட்டின் அதிகமுள்ள உணவினை தெரிவு செய்யுங்கள்.
புரதச்சத்து நமது ஆற்றலுக்கு மட்டுமின்றி நமது தசையை மீட்டெடுக்கவும் உதவி செய்கின்றது. அதே போன்ற கொழுப்பு குறைவான பால் அருந்திக் கொள்ளலாம்
கொழுப்பு அதிகமாக உணவினை எடுத்துக் கொண்டால் சோர்வு காணப்படுவதுடன், நடுக்கம் ஏற்படும் உணர்வும் தோன்றும்.