சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடித்தால் இவ்வளவு பாதிப்புகள் ஏற்படுமா?
மனிதர்கள் உயிர்வாழ்வதற்கு இன்றியாதது தண்ணீர் ஆகும. இதன் நுகர்வு ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் கொடுக்கும் நிலையில், தண்ணீர் குடிக்கும் நேரத்தில் சில குழப்பங்களும் நமக்கு ஏற்படுவதுண்டு.
அதாவது நாம் சாப்பிட்டு முடித்த பின்பு, சாப்பிடுவதற்கு முன்பு இந்த தருணத்தில் தண்ணீர் அருந்துவது சில உடல்நல பிரச்சினையை ஏற்படுத்தும். செரிமானத்தை பாதிக்கவும் செய்கின்றது.
தண்ணீர் எப்பொழுது குடிக்கலாம்?
உணவிற்கு முன்பு தண்ணீர் பருகுவது உடலை ஹைட்ரேட் செய்ய உதவுவதுடன், செரிமான அமைப்பை தயார் செய்யவும் உதவுகின்றது. தண்ணீர் குடித்த உடனே சாப்பிடக்கூடாது, அது அதிகமாக சாப்பிடும் வாய்ப்பை குறைக்கும். ஆதலால் உணவு அருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது நலமாக இருக்கும்.
பல கலாச்சாரங்களில் சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கும் பழக்கம் இருந்து வருகின்றது. அதாவது இவை உவை விழுங்குவதற்கும், செரிமானத்திற்கும், வாய் மற்றும் தொண்டையின் வறட்சியை தடுக்கவும் உதவுகின்றது. ஆனால் அதிகப்படியான நீரை எடுத்துக்கொள்ளாமல் சிறிது தண்ணீர் எடுத்துக்கொள்ளலாம்.
உணவிற்கு பின்பு நீர் அருந்துவது நன்மையை ஏற்படுத்தினாலும், எடை அதிகரிப்பு, அஜீரணத்திற்கு வழிவகுக்கும் என்றும் கூறப்படுகின்றது. இவ்வாறு சாப்பிட்டு முடித்த பின்பு தண்ணீர் குடிப்பதால் மீதமுள்ள உணவுத் துகள்களை கழுவவும், வாய்வழி சுகாதாரத்தை உறுதி செய்கின்றது. மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கின்றது. ஆதலால் அதிகளவு தண்ணீர் எடுத்துக் கொள்ளாமல் குறைந்த அளவு எடுத்துக் கொள்ளலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |