தூங்கும் முன்பு தொப்புளில் இரண்டு சொட்டு எண்ணெய்.. இந்த பிரச்சினையே இருக்காதாம்
தூங்கும் முன்பு தொப்புளில் சில துளி எண்ணெய் விட்டு தூங்கினால் நல்ல பலனை காணலாம்.
தொப்புளில் எண்ணெய்
பண்டைய காலத்தில் தூங்குவதற்கு முன்பு தொப்புள் பகுதியில் எண்ணெய் தடவி தூங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இதற்கு நீங்கள் தேங்காய் எண்ணெய், நெய், ஆமணக்கு எண்ணெய் என்று பல்வேறு விதமான எண்ணெய் வகைகளை தூங்குவதற்கு முன் தொப்புள் பகுதியில் தடவி நன்றாக மசாஜ் செய்து விட்டு தூங்குவதால் அதிக நன்மையை பெறலாம்.
இவ்வாறு செய்வதால் சருமத்தின் ஆரோக்கியம் அதிகரிப்பதுடன், ஒட்டுமொத்த உடலும் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் நமது உடம்பில் உள்ள நரம்பு மண்டலமும் சிறப்பாக செயல்படுகின்றது.
தொப்புளில் எண்ணெய் வைப்பதால் என்ன பயன்?
தூங்கும் முன்பு தொப்புளில் 3 முதல் 7 சொட்டுகள் வரை நெய் மற்றும் தேங்காய் எண்ணெய் வைத்து மசாஜ் செய்தால் கண்களில் உள்ள வறட்சி நீங்குவதுடன், கண்பார்வையும் சிறப்பாக இருக்கும்.
இதே போன்று கடுகு எண்ணெய்யைத் விட்டு மசாஜ் செய்தால் மூட்டுகளில் வலி இல்லாமல் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
ஆமணக்கு எண்ணெய்யை விட்டு மசாஜ் செய்தால் முழங்கால் வலி, மூட்டு வலி, கால் வலி குணமாவதுடன், எலும்புகளும் வலிமை பெறுமாம்.
வேப்பெண்ணெயை வைத்து மசாஜ் செய்துவிட்டு தூங்கினால், முகப்பரு போவதுடன், சருமமும் பளபளப்பாக காணப்படுவதுடன், தினசரி இதனை செய்தால் நல்ல பலனை பெறலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |