சூடான சாதத்துக்கு பீட்ரூட் ப்ரை செஞ்சு கொடுங்க.. கிராமத்து ஸ்டைலில் எப்படி செய்யலாம்?
எப்போதும் உங்களுடைய உணவு பழக்கங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது ஒவ்வொருவரின் கடமையாகும்.
மதிய நேர சாதத்துக்கு ஒரே மாதிரியான குழம்பு செய்யாமல் ஒரு நாள் கிராமத்து ஸ்டைஸில் பீட்ருட் பொரியல் செய்து கொடுங்கள்.
இந்த பொரியல் பீட்ரூட் சாப்பிடாதவர்களையும் சாப்பிட வைக்கும். சிறுவர்கள் முதல் பெரியவர்களை வரை அனைவருக்கும் இதனை கொடுக்கலாம்.
பார்ப்பதற்கு சிவப்பு நிறத்தில் இருக்கும் பீட்ரூட்டை பெரும்பாலானவர்கள் விரும்பி சாப்பிடுவதில்லை.
அப்படியானவர்களுக்கு இதுவொரு நல்ல வாய்ப்பாக அமையும். உங்களுக்கு பீட்ரூட் பொரியல் சரியாக செய்ய தெரிந்தால் பிடிக்காதவர்களும் கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.
அந்த வகையில் கிராமத்து சுவையில் இலகுவாக பீட்ரூட் பொரியல் எப்படி செய்யலாம் என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
- பீட்ரூட் - 2
- எண்ணெய் - தேவையான அளவு
- கடலை மாவு -1 கப்
- அரிசி மாவு - 1/2 கப்
- சோள மாவு - 1/2
- மிளகாய் தூள் - 1 1/2
- உப்பு - சுவைக்கேற்ப
- பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
- தண்ணீர் - சிறிது
- கறிவேப்பிலை - 1 கைப்பிடி
பீட்ரூட் பொரியல் செய்முறை
முதலில் தேவையான அளவு பீட்ரூட்டை எடுத்து தோல் நீக்கி நன்றாக நறுக்கிக் கொள்ளவும்.
அதன் பின்னர் ஒரு பாத்திரத்தில் கடலை மா, அரிசி மா, சோள மா மூன்றையும் ஒன்றாக போடவும்.

அடுத்து, மிளகாய் தூள், உப்பு, பெருங்காயத் தூள் போட்டு கைகளால் நன்றாக பிசைந்து விடவும். அந்த மசாலாவுடன் நறுக்கி வைத்திருக்கும் பீட்ரூட் துண்டுகளை போட்டு கிளறி விட்டு கொஞ்சமாக நீர் தெளித்து விடுங்கள்.
பீட்ரூட் நன்றாக மசாலாவுடன் கலந்து, ஒரு வாணலியை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் விட்டு சூடானதும், பீட்ரூட்டை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொரித்தெடுக்கவும்.

இறுதியாக பீட்ரூட் பொரியலில் கொஞ்சமாக கறிவேப்பிலை தூவி, பரிமாறினால் சுவை நன்றாக இருக்கும். தண்ணீர் தேவை என்றால் இன்னும் கொஞ்சம் ஊற்றி பிரட்டி எடுக்கவும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |