உடல் கழிவுகளை வெளியேற்றும் பீட்ரூட் கஞ்சி - புளிக்க வைத்து எப்படி செய்வது?
வயிற்றில் நல்ல பக்றீரியாக்களை வளர்த்து கழிவுகளை வெளியேற்றும் பீட்ரூட் கஞ்சி எப்படி செய்யலாம் என்பதை பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பீட்ரூட் கஞ்சி
தற்போது சமூக வலைத்தளங்களில் பீட்ரூட் கஞ்சி மிகவும் பிரபலமாக வைரலாகி வருகின்றது. பீட்ரூட் கஞ்சி நொதித்தல் முறையில் (புளிக்க வைத்து) செய்யப்படுவது.
அதனால் இயற்கையாகவே அதில் ப்ரோ பயாடிக் பண்புகள் அதிகமாக இருக்கும். ப்ரோ பயோட்டிக் க் பண்புகள் குடலில் நல்ல பாக்டீரியாக்களை வளர்க்க உதவி செய்யும்.
இதனால் வயிறும் ஒட்டுமொத்த உடலும் குளிர்ச்சியாக இருக்கும். இதில் நிறைய நார்ச்சத்துக்களும் ஆன்டி-ஆக்சிடன்ட்களும் நிறைந்திருக்கின்றன.
அதோட இந்த கஞ்சியில் சேர்க்கப்படும் பிற மசாலா பொருட்கள் உடலுக்கு நல்ல சத்தை கொடுக்கும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

தேவையான பொருள்கள்
- பீட்ரூட் - 2 (அ) 3,
- கடுகு இரண்டு ஸ்பூன்
- பிளாக் சால்ட் - 2 ஸ்பூன்
- மிளகாய் பொடி அரை ஸ்பூன்

செய்முறை
முதலில் கடுகை பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு லிட்டர் அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் பீட்ரூட்டை நீள வாக்கில் சிறு சிறு மெல்லிய துண்டுகளாக சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
நறுக்கிய பீட்ரூட்டை கண்ணாடி பாட்டிலில் போட்டு அதில் எடுத்து வைத்திருக்கும் ஒரு லிட்டர் தண்ணீரையும் ஊற்ற வேண்டும்.

பின்னர் பொடித்த கடுகு தூள், மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலக்கி விட்டு பின்னர் அதை ஒரு மூடி போட்டு மூடி அறை வெப்ப நிலையில் மூன்று முதல் நான்கு நாட்கள் வரை குளிக்க வைக்க வேண்டும்.
அதன்பின்பு எடுத்து வடிகட்டினாள் சுவையான ப்ரோ பயோடிகள் நிறைந்த ஆரோக்கியமான பீட்ரூட் கஞ்சி தயார்.
இந்த பீட்ரூட் கஞ்சியை வாரத்திற்கு இரண்டு நாட்கள் ஆவது எடுத்துக் கொள்வது மிக நல்லது. எல்லா பருவ காலங்களிலும் இந்த கஞ்சி எடுத்துக் கொள்ளலாம். வெயில் காலங்களில் குறிக்கும் போது நீண்ட நேரம் உடல் ஹைட்ரேடிங்காக இருக்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |