வெறும் வயிற்றில் பீட்ரூட் ஜுஸ் எடுத்துக் கொள்பவரா? உங்களுக்குத் தான் இந்த பதிவு
ஊட்டச்சத்துக்களுக்கு பஞ்சமில்லாத காய்களில் ஒன்றாக பீட்ரூட் காணப்படுகின்றது. இவை சாலட்டாகவும், ஜுஸ் ஆகவும் அதிகமாக மக்கள் எடுத்துக் கொள்கின்றனர்.
பீட்ரூட்டில் நார்ச்சத்து, இயற்கையான சர்க்கரை, மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம் என பல சத்துக்கள் உள்ளது. இந்நிலையில் ஆரோக்கியத்தை அள்ளித்தரும் பீட்ரூட்டினை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சில தொந்தரவுகளை சரிசெய்யலாம்.
பீட்ரூட்டின் பயன்கள்
சிறுநீர் தொற்று பிரச்சினை உள்ளவர்கள் காலையில் பீட்ரூட் ஜுஸை கண்டிப்பாக குடித்துவந்தால் நிச்சயம் நிவாரணம் கிடைக்கும்.
உடலில் திரவம் பற்றாக்குறை இருக்கக்கூடாது. ஆனால் நீர் தேக்கம் ஏற்பட ஆரம்பித்தால் அது ஒரு பிரச்சனையாகிவிடும். உங்களுக்கும் இதுபோன்ற பிரச்சனை இருந்தால் கண்டிப்பாக பீட்ரூட்டை வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள்.
தொப்பை மற்றும் இடுப்பை சுற்றிலும் கொழுப்பு, உடல் எடையினால் சிரமப்படுபவர்கள் கட்டாயம் பீட்ரூட்டை காலையலி் எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றில் இருக்கும் நார்ச்சத்து அதிக நேரம் பசி எடுக்காமல் இருப்பதால், அதிக உணவு உண்பதையும் உங்களால் தவிர்க்க முடியும்.
சுகாதார நிபுணர்கள் காலையில் பீட்ரூட்டை சாப்பிடுவதற்கு பரிந்துரை செய்கின்றனர். ஊட்டசத்துக்களை உறிஞ்சுவது அதிகரிப்பதுடன், எந்த வகையிலும் நோய்களையும் ஏற்படுத்தாது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |
