ஆரோக்கியமான பீட்ரூட் தோசை: செய்து பார்க்கலாம் வாங்க
பொதுவாக தோசை என்றால் அனைவருக்கும் பிடிக்கும்.
அதுவும் வித்தியாசமான கேழ்வரகு, பீட்ரூட் தோசை இன்னும் அருமையானதாகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.
பீட்ரூட் இரத்த சோகை நோய் வருவதை தடுக்கும்.
தேவையான பொருட்கள்
துருவிய பீட்ரூட் - 3 மேசைக்கரண்டி
அரிசி மா - 1 மேசைக்கரண்டி
ரவை - 1 தேக்கரண்டி
கேழ்வரகு மா - 100 கிராம்
பச்சை மிளகாய் - 1
வெங்காயம் - 1
கொத்தமல்லி - சிறிதளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி என்பவற்றை பொடியாக நறுக்கவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவை போட்டு அதில் ரவை, அரிசி மா, துருவிய பீட்ரூட், வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாய், உப்பு என்பவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும்.
அதன்பின்னர் அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மா பதத்தில் கரைத்து 30 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.
பின்பு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து மாவை தோசைகளாக ஊற்றி, எண்ணெய் விட்டு இரண்டு பக்கமும் வேக விடவும்.
அருமையான கேழ்வரகு பீட்ரூட் தோசை தயார்.