இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் பீட்ரூட் சட்னி! இட்லி, தோசை, சாதத்துக்கு வச்சு சாப்பிடலாம்
பிரபலமான உணவுகளாக வலம் இட்லி, தோசைகளுக்கு இப்போது பல வகை சட்னிகள் தோன்றிய வண்ணம் உள்ளன. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனித்துவமான சுவையில் உள்ளன.
இந்த சுவைமிகு சட்னிகளோடு போட்டி போடும் சட்னியான பீட்ரூட் சட்னியை எப்படி தயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.
பீட்ரூட் பயன்கள்
பீட்ரூட்டில் இரும்புச் சத்து, தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிரம்பி காணப்படுகின்றன. இவை ரத்த சிவப்பு அணுக்களை சரிசெய்யவும், அவற்றை மீண்டும் செயல்படுத்தவும் உதவுகின்றன.
இதனால் உடலுக்கு தேவையான ஆக்சிஜன் தேவை அதிகரிக்கும். கேரட், ஆரஞ்சு மற்றும் நெல்லிக்கனி சாறுகளை விட முதலிடத்தில் பீட்ரூட் சாறு உள்ளது.
பீட்ரூட் சட்னி செய்யத் தேவையான பொருட்கள்
- பச்சை மிளகாய் – 8
- புளி – 1/2 எலுமிச்சை அளவு
- பீட்ரூட் – 2
- சீரகம் – 1ஸ்பூன்
- கடுகு – 1 டீ ஸ்பூன்
- உளுந்து – 1 டீ ஸ்பூன்
- கடலை பருப்பு – 1 டீ ஸ்பூன்
- காய்ந்த மிளகாய் – 2
செய்முறை
முதலில் ஒரு சிறிய கடாய் எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பச்சை மிளகாய் இட்டு வதக்கவும்.
பின்னர் புளி மற்றும் பீட்ரூட் நன்றாக வதக்கவும்.
பீட்ரூட்டில் உள்ள பச்சை வடை செல்லும் அளவிற்கு வதக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.
பிறகு ஒரு மிக்சி எடுத்து அதில் ஒரு ஸ்பூன் சீரகம் சேர்த்து ஆற வைத்துள்ள நன்கு வதக்கிய பீட்ரூட் மற்றும் உப்பை அவற்றோடு சேர்த்து சட்னிக்கு அரைப்பது போல் நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அதன் பின்னர் அதே கடாயில் தாளிக்க வழங்கப்பட்டுள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து அரைத்து வைத்துள்ள சட்னியில் சேர்த்து கிளறவும்.
இப்போது சுவையான மற்றும் டேஸ்டியான ருசியில் பீட்ரூட் தயராக இருக்கும். இவற்றை நீங்கள் விரும்பிய இட்லி, தோசைகளுக்கு சைடிஷ்சாக எடுத்துக்கொண்டு சுவைக்கலாம்.