வாஷிங்மெசினை ஓப்பன் பண்ணிய போது காத்திருந்த ஷாக்! அசால்ட்டாக டீல் செய்த பெண்
அமெரிக்காவில் பயன்படுத்தாமல் இருந்த வாஷிங்மெஷினுக்குள் வாழ்ந்த தேனீக் கூட்டத்தை பெண் ஒருவர் கைகளால் அகற்றும் வீடியோ வைரலாகியுள்ளது.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் ஒரு குடும்பத்தின் வீட்டில் பயன்படுத்தப்படாத வாஷிங்மெஷின் ஒன்றை செடி, கொடிகள் இருக்கும் தோட்டம் பக்கம் வைத்துள்ளனர்.
பல நாட்கள் கழித்து அந்த வாஷிங்மெஷின் இருக்கும் பக்கம் வீட்டின் உரிமையாளர் பெண்மணி செல்லும் போது தேனீக்கள், வாஷிங்மெஷினுக்குள்ளேயே கூடு கட்டியுள்ள விஷயம் தெரியவந்துள்ளது.
தேனீக்களை ரசிக்கும் எரிகா தாம்சன், தேனீக்கள் கடிக்கும் என்ற பயம் சிறிதும் இல்லாமல், அவற்றை தண்ணீரை அள்ளுவதுபோல் அள்ளி, மற்றொரு பெட்டியில் சேகரிக்கிறார்.
எரிகா தாம்சன் தேனீக்களை எடுத்து மற்றொரு பெட்டியில் வைக்கும் பணிகளை, அவருடன் சென்ற மற்றொருவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.
இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள எரிகா, தேனீக்கள் சேகரிப்பதில் தனக்கு எப்போதும் அளவு கடந்த ஆர்வம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இன்ஸ்டாவில் ஒருவர் தேனீக்களை வெறும் கைகளாலேயே சேகரிக்கும் போது அவை உங்களை கடிக்கவில்லையா என கேட்டதற்கு, 'தனக்கு தேனீக்களை சேகரிப்பதில் மிகுந்த அனுபவம் இருப்பதாகவும், அவற்றுக்கும் தனக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதால் அவை கடிப்பதில்லை' எனக் கூறியுள்ளார்.
இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி பல லட்சம் பார்வையாளர்களை அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது.