நைட் டைம் 'இந்த' தப்ப மட்டும் பண்ணாதீங்க.. அப்போ இது தான் தொப்பைக்கான காரணமாக?
பொதுவாக திடீரென உடல் எடை அதிகரிக்க நாம் விடும் சில தவறுகள் தான் காரணமாகும்.
நாம் காலையில் செய்யும் சில தவறுகளை விட இரவில் தூங்குவதற்கு முன் நாம் விடும் தவறு உடலில் அதிகமான தாக்கத்தை செலுத்தும். பிடிவாதமான கொழுப்பு மற்றும் உடல் எடையை குறைப்பது என்பது சாதாரண காரியமல்ல.
மோசமான உணவுப்பழக்கம் மற்றும் உடல் செயல்பாடு இல்லாமை ஆகியவை உடல் எடையை அதிகரிப்பதோடு சுகாதார பிரச்சினைக்கு வழிவகுக்கின்றது என உலக சுகாதார அமைப்பு கருத்து வெளியிட்டுள்ளது.
அந்த வகையில் நாம் இரவு நேரங்களில் என்னென்ன தவறுகள் விடுகின்றோம் என்பதனை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
இரவு நேரங்களில் நாம் விடும் தவறுகள்
Image - eatthis
1. நள்ளிரவில் சிற்றுண்டி சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனெனின் சிற்றுண்டிகளில் பெரும்பாலும் சர்க்கரை மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் அதிகமாக உள்ளன. இது தேவையற்ற கொழுப்புக்களை உடலில் சேகரிக்கும்.
2. படுக்கையில் செல்லும் முன்னர் ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள் அல்லது மடிக்கணினிகள் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இது தூக்கத்தில் தாக்கம் செலுத்தி ஹார்மோனில் ஏற்றத்தாழ்வு ஏற்படும்.
3. தூக்க அட்டவனையை தினமும் செய்ய வேண்டும். உரிய நேரத்தில் தூக்கத்திற்கு சென்று அந்த நேரத்தில் சரியாக எழுந்திருக்க பழக வேண்டும். இதனை வார இறுதி நாட்களில் கூட கடைபிடிக்க வேண்டும்.
4. ஒல்லியான புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்து ஆகியவற்றை உள்ளடக்கிய சமச்சீரான இரவு உணவைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இது தான் ஆரோக்கியமான தூக்கத்தை கொடுக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |