திடீரென்று எடையை குறைப்பவர்களுக்கு காத்திருக்கும் பேராபத்து... இனி இந்த பிழையை செய்யாதீர்கள்!
எடை குறைப்பு முயற்சியின் போது பலரும் சந்திக்கும் மிக பெரிய பேராபத்தில் ஒன்று தான் முடி உதிர்வு.
இதனை ஆரம்பத்தில் தடுக்க வில்லை என்றால் பாரிய பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பது பல மருத்துவர்களின் எச்சரிக்கையாக உள்ளது.
உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் ஏதேனும் தவறு செய்கிறீர்கள் என்றாலும் அதற்கான பக்கவிளைவுகளை அனுபவிக்கக் கூடும்.
இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
நீங்கள் உடல் எடையை குறைப்பில் ஈடுபடும்போது ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதால் தலைமுடி உதிரும். நீங்கள் வேகமாக உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறீர்கள் எனில் தலைமுடியும் வேகமாக உதிரத்தொடங்கும். இது 3 முதல் 6 மாதம் வரை நீடிக்கும்.
நீங்கள் தினசரி சாப்பிடும் உணவில் மாற்றம் செய்தாலும் முடி உதிரும்.
உங்கள் உடலுக்கு போதுமான ஊட்டச்சத்தை எடுத்துக்கொள்ளவில்லை என்றாலும் முடி உதிரும்.
அமினோ அமிலங்கள் புரதத்தின் கட்டுமானத் தொகுதிகள் மற்றும் முடி வளர்ச்சிக்கு அவசியம்.
முடியின் முக்கிய ஊட்டச்சத்தான புரோட்டீன் கெரட்டின் உற்பத்திக்கு தேவைப்படுகின்றன. உங்கள் உடலுக்கு போதுமான புரதம் கிடைக்காதபோது, புரதச் சத்து குறைபாடு ஏற்படுகிறது. அது முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும்.
எனவே, குறைந்த கலோரி கொண்ட டயட்டை பின்பற்றுகிறீர்கள் எனில் அதில் புரதம் இல்லை என்றால், நீங்கள் முடி உதிர்வை சந்திக்கலாம்.
எடையைக் குறைக்க வெயிட் லாஸ் சர்ஜரி செய்திருக்கிறீர்கள் எனில் உடல் உடனடி உடல் எடைக் குறைப்பை தாங்க முடியாமல் அதன் பக்க விளைவுகளை முடியின் காட்டும். எனவே முதலில் அது முடி உதிர்தலுக்கு வழி வகுக்கும்.
அறுவை சிகிச்சை செய்து உடல் எடையைக் குறைப்பவர்களுக்கு ஸிங்க் மற்றும் விட்டமின் பி12 சத்து குறைவதாகவும், அதனால் முடி உதிர்வதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
எனவே ஊட்டச்சத்தில் கவனம் செலுத்துங்கள். உடல் எடையைக் குறைத்து ஃபிட்டாக இருப்பது அவசியம்தான் என்றாலும் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்துகளும் அவசியம்.ஊட்டச்சத்தில் குறைபாடு வைத்தால் இதுபோன்ற பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும்.
எனவே உடல் எடையைக் குறைப்பதால் முடி உதிர்கிறதே என கவலைகொள்பவர்கள் ஊட்டச்சத்து மிக்க உணவில் கவனம் செலுத்துங்கள்.