காலையில் முகம் நிலா போன்று பிரகாசிக்கனுமா? இரவு தூங்கும் முன்பு இதை பயன்படுத்துங்க
இரவில் தூங்கும் முன்பு முகத்திற்கு இதை பயன்படுத்தினால் முகம் காலையில் பிரகாசமாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.
முகத்தில் சுருக்கங்களை நீக்குவதற்கு வைட்டமின் ஈ கேப்ஸ்யூல்கள் உதவுகின்றது. பொதுவாக சருமம் இளமையாக இருக்க வேண்டும் என்று தான் பலரும் விரும்புவார்கள்.
இரவில் செய்ய வேண்டியது என்ன?
வைட்டமின் ஈ சத்தானது மாசு மற்றும் சூரியனின் தீங்குவிளைவிக்கும் கதிர்களால் சருமத்தினை சேதப்படுத்தாமல் பாதுகாப்பதுடன், ஆக்ஸிஜனேற்றியாகவும் இருக்கிறது. சருமம் அழகாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், வைட்டமின்ஈ காப்ஸ்யூல்களை பயன்படுத்தலாம்.
முகப் பொலிவை அதிகரிக்க எலுமிச்சை உதவும் நிலையில், இதில் இருக்கும் வைட்டமின் சி முகப்பொலிவை கொடுக்கின்றது. வைட்டமின் ஈ மாத்திரையை மாத்திரையின் எண்ணெய்யை பிரித்தெடுத்து எலுமிச்சை சாறுடன் கலந்து முகத்தில் பூசினால் காலையில் முகம் பொலிவாக இருக்கும்.
லேசான கைகளால் முகத்தை மசாஜ் செய்து, 15 அல்லது 20 நிமிடங்களுக்கு பின்பு கழுவவும்.
இதே போன்று தேனும் உங்களது முகத்திற்கு அதிக பொலிவை தருவதுடன், முகப்பரு மற்றும் தழும்புகளை அகற்றவும் செய்கின்றது. முகம் ஈரப்பதமாகவும் இருக்கும். எண்ணெய்யுடன் சிறிது தேன் கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் காத்திருந்து கழுவினால், முகத்தில் உள்ள வறட்சி, வீக்கம், சுருக்கங்கள் முற்றிலும் நீங்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |