வீட்டிலேயே முகத்தை அழகாக மாற்றக்கூடிய சில அழகுக் குறிப்புக்கள்
பெண்கள் அழகாக இருப்பதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் நேரத்தை செலவு செய்கின்றனர்.
செலவு செய்யும் அந்த நேரத்தை கொஞ்சம் பயனுள்ளதாக எப்படி மாற்றலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். இதற்காக நீங்கள் வீட்டில் காணப்படும் சமயலறை பொருட்களை உபயோகித்தால் போதும்.
இந்த வீட்டு அழகுக்குறிப்புக்கள் மூலம் முகம் பளீச் என்று காணப்படுகின்றது.
அழகுக்குறிப்புகள்
நீங்கள் இரவில் உறங்கச் செல்லும் முன்னர் ஒரு சிறிய உருளைக்கிழங்கை பேஸ்ட்போல அரைத்து அதை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவினால் முகம் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும்.
வீட்டில் இருக்கும் காய்ச்சாத பாலை எடுத்து அதை முகத்தில் ஒவ்வொரு நாளும் தடவி வந்தால் முகச்சுருக்கங்கள் மறைந்து முகம் இளமை தோற்றத்தை கொடுக்கும்.
ரோஸ் வாட்டர் ஒரு தேக்கரண்டி, தேன் ஒரு தேக்கரண்டி, கஸ்தூரி மஞ்சள் ஒரு தேக்கரண்டி மூன்றையும் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவினால் நல்ல பொலிவை தரும்.
நீங்கள் குளிக்கும் முன்னர் பாதாம் ஒயில் கொஞ்சம் எடுத்து அதை உடல் முழுவதும் தடவி 20 நிமிடம் கழித்து குளித்தால் உங்கள் உடல் அழகு ஒரு ஆரோக்கியமான அழகான தோற்றத்தை பெற்றுக்கொள்ளும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |