10 நாட்களில் முகம் பளிச்சிட வேண்டுமா? இந்த ஒரு ஃபேஸ் பெக் போட்டால் போதும்
தற்போது இருக்கும் சூழலில் பெரும்பாலானோருக்கு தங்களின் உடலையும் சருமத்தையும் கவனிக்க நேரம் என்பது இருப்பதில்லை. தற்போது இருக்கும் பெண்களும் சரி ஆண்களும் சரி இயற்கையாக இருக்கும் அழகுசாதப்பொருட்களை தேடுவது குறைவாக காணப்படுகின்றது.
நாம் சருமத்தை அழகுபடுத்த இயற்கை பொருட்கள் பெரிதும் உதவுகிறது. நாம் செயற்கையான பொருட்களை சருமத்திற்கு பாவிக்கும் போது அது குறுகிய காலத்தில் மட்டும் தான் அழகாக இருக்கும்.
அதில் இருந்து வெளிவரும் கெமிக்கல்களால் அந்த பொருட்கள் இல்லாமல் எமது முகத்தை பராமரிப்பது கடினமாகி விடும் ஆனால் இதுபோன்ற பிரச்சனைகள் இயற்கை பொருட்கள் பாவித்தால் வருவது இல்லை.
இதனடிப்படையில் முகத்திற்கு தக்காளியை வைத்து அழகுபடுத்தும் போது அது என்னென்ன மாற்றத்தை கொண்டு வரும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தள்ளாளி ஃபேஸ் பெக்
வீட்டில் தக்காளி இலகுவாக எடுத்துக்கொள்ளலாம். இது சமைப்பதற்காக பயன்படும் ஒரு பழமாகும். இதன் பண்புகளுக்காக இதை அழகுபடுத்தவும் பயன்படுத்துகிறார்கள். நன்றாக பழுத்த தக்காளியை விதையுடன் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதை 20 முதல் 30 நிமிடம் வரை முகத்தில் அப்படியே பூசி வைத்து கழுவ வேண்டும். இதனால் சருமம் எண்ணெய் பசை, கருமை நிறம் போன்றவற்றில் இருந்து விடுபடும். தக்காளியுடன் வெள்ளரிச்சாறை சம அளவில் எடுத்து பஞ்சில் நனைத்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் கழுவ வேண்டும்.
இதை அதிகாலையில் தினமும் செய்வதால் முகத்தில் இருக்கும் பருக்கள் மறைந்து அதனுடைய அடையாளமும் இல்லாமல் போகும். தக்காளி சாறு அரை டீஸ்பூன் தேன் அரை டீஸ்பூன் சமையல் சோடா ஒரு சிட்டிகை இந்த மூன்றையும் கலந்து பேஸ்ட் போல செய்து எடுத்து கொள்ள வேண்டும்.
இதை முகத்தில் 10 நிமிடம் வரை வைத்து பின்னர் சாதாரண குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்தால் கருவளையங்கள் இருந்த இடம் தெரியாமல் போகும். முகம் மட்டும் உடலை விட நிறம் குறைவாக காணப்பட்டால் அவர்களுக்கு முகத்தில் இருக்கும்இறந்த செல்கள் அதிகமாக இருப்பது தான் இதற்கு காரணம்.
இவர்கள் தக்காளியின் சாறுடன் கால் டீஸ்பூன் ரவையைக் நன்றாக கலந்து முகத்தில் தேய்த்து கழுவி வந்தால் இறந்த செல்கள் இல்லாமல் போகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |