உடல் மிகவும் சோர்வாக இருக்கா? இந்த ஒரு சாதத்தை சாப்பிட்டால் போதும்
நாம் வீட்டில் அதிகமாகவும் அடிக்கடி சாப்பிடும் ஒரு உணவு என்றால் அது சாதம் தான். அந்த சாதத்தை வித்தியாசமான முறையில் செய்து சாப்பிட யாருக்கு தான் பிடிக்காது. சாதத்தில் காபோஹைதிரேற்று தான் அதிகமாக இருக்கிறது.
இது நமது உடலின் சக்திக்கு மிகவும் முக்கியமாகும். இந்த சாதத்துடன் கோவாக்காய் சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு மிகவும் தேவை. கோவக்காய் ஆயுர்வேத மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது.
இது நீரிழிவு நோயை குணப்படுத்துகிறது. வாரம் ஒருமுறை இதை உணவில் சேர்த்துக்கொள்ளும்போது, உங்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. உடல் பருமனை கட்டுப்படுத்த உதவுகிறது.
சோர்வை நீக்க உதவுகிறது. நரம்பு மண்டலத்தை பாதுகாக்கிறது. ஆனால் கோவாக்காயை அதன் சுவையின் காரணமாக குழந்தைகள் பெரியவர்களில் சிலர் சாப்பிட மறுப்பார்கள். எனவே கோவாக்காயை வைத்து எப்படி சாதம் செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
- கடுகு – கால் ஸ்பூன்
- உளுந்து – கால் ஸ்பூன்
- கடலை பருப்பு – 2 ஸ்பூன்
- கடலை – ஒரு கைப்பிடியளவு
- பச்சை மிளகாய் – 2
- வர மிளகாய் – 2
- பெரிய வெங்காயம் – 1
- தக்காளி – 1
- மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
- மிளகாய்த் தூள் – அரை ஸ்பூன்
- மல்லித்தூள் – ஒரு ஸ்பூன்
- கோவக்காய் – கால் கிலோ
- வடித்த சாதம் – 2 கப்
- புளிக்கரைசல் – கால் கப்
- கறிவேப்பிலை – ஒரு கொத்து
செய்முறை
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன் அதில் கடுகு, உளுந்து, கடலை பருப்பு, கடலை, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவேண்டும். ஒரு கொத்து கறிவேப்பிலையை சேர்க்கவேண்டும். அடுத்து பச்சை மிளகாய் மற்றும் வர மிளகாய் சேர்த்து பொரிந்தவுடன், பெரிய வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.
அடுத்து மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித்தூள் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். பின்னர் கோவக்காயை சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். அடுத்து புளிக்கரைசலை சேர்த்து நன்றாக அது வற்றியவுடன், வடித்து, ஆறிய சாதத்தை சேர்த்துக் கிளறவேண்டும். பின்னர் நன்றாக கிளறி இறக்கினால் சுவையான கோவக்காய் சாதம் தயார். இதை குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் சாப்பிடலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |