என்றும் இளமையாக இருக்க இந்த டிப்ஸ்களை ட்ரை பண்ணி பாருங்க
பொதுவாகவே பெண்களும் ஆண்களும் தங்களின் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கத் தான் விரும்புவார்கள். அதிலும், அழகு விடயத்தில் மிகவும் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள்.
அதற்காக அவர்கள் பார்லர்கள் சென்று தங்களின் சருமத்தையும் உடலையும் மெருகூட்டிக் கொள்வார்கள். அதுபோல சில இயற்கையான பழங்களையும், காய்கறிகளையும் சாப்பிட்டு எந்த வயதிலும் அழகை தக்க வைத்துக் கொள்ளலாம்.
அந்தவகையில் உடலையும் அழகையும் பாதுகாக்க இந்த உணவுகளை தினமும் சாப்பிட்டு வந்தால் போதும்.
அழகை பாதுகாக்க...
பல நன்மைகளைக் கொடுக்கக் கூடிய தேனை தினமும் சாப்பிட்டு வந்தால் சருமம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்
இளநீரையை அடிக்கடி குடித்தால் வயதான தோற்றத்தைக் கொடுக்காது.
வைட்டமின் சி நிறைந்த பழங்கள் மற்றும் பழச்சாறுகளை தினுமும் குடித்து வந்தால் சருமம் பொலிவாக மாறும்.
ஊறவைத்த பாதமை தினமும் சாப்பிட்டு வந்தால் சருமம் வறட்சி இல்லாமல் போகும்.
பெரி பழங்களில் ஏராளமான வைட்டமின்கள் உள்ளன அவை முடி மற்றும் நகங்களை வலுவாக்குகிறது.
இலை கீரைகளை தினமும் சாப்பிட்டு வந்தால் சருமம் ஆரோக்கியமாகவும் பொலிவாகவும் இருக்கும்.
இனிப்பு உருளைக் கிழங்கை சாப்பிட்டு வந்தால் சருமத்தில் இருக்கும எண்ணெய் தன்மையை நீக்கி முடி வளர்ச்சியையும் ஊக்கப்படுத்தும்.
தினமும் தயிர் சாப்பிடுவது ஆரோக்கியமான முடி மற்றும் முகப் பிரச்சினைகளைப் போக்குகிறது.
கற்றாழையை வாரத்திற்கு இரண்டு முறை சருமத்தில் தடவி குளித்து வந்தால் சருமத்திற்கு நல்ல பலன்கள் கிடைக்கும்.
வாரத்திற்கு ஒரு முறை தேங்காய் எண்ணெய்யில் மசாஜ் செய்து குளித்தால உடல் சூடு தணிந்து சருமம் பொலிவாக மாறும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |