முகத்தை ஒரே பேக்கில் பொலிவு பெற வைக்கணுமா? அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்காக தான்..!
பொதுவாக பெண்கள் என்ன சரி செய்து அவர்களின் முகத்தை பொலிவாக வைக்க வேண்டும் என ஆசைக் கொள்வார்கள்.
வெள்ளையாக இருக்க வேண்டும் என நினைக்கும் முன்னர் அவர்களின் முகம் பொலிவாக இருந்தால் அடுத்த வேலையை பார்ப்பார்கள்.
அந்த வகையில் முக அழகை வீடுகளில், இருக்கின்ற சில பொருட்களை கொண்டு எளிமையான முறையில் நாம் பராமரிக்கலாம்.
கடலை மாவை பயன்படுத்தி முகத்திற்கு பயன்படக்கூடிய ஃபேஸ் பேக் தயாரிக்கலாம். இதனை அவர்களின் சருமத்திற்கேற்ப மாற்றிக் கொள்ளலாம்.
இதன்படி, கடலை மாவை பயன்படுத்தி ஃபேஸ் பேக் எப்படி தயாரிப்பது என தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
கடலை மா செய்யும் வித்தைகள்
1. வறண்ட சரும அமைப்பை கொண்டவர்கள் வாழைப்பழம், கற்றாலை ஜெல் இரண்டையும் கலந்து முகத்திற்கு தடவலாம்.
2. ன்சிட்டிவ் ஸ்கின் என்றால் கடலைமாவுடன் பன்னீர் ரோஜா இதழ் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து விட்டு மெதுவாக தடவலாம்.
3. சாதாரண சருமத்திற்கு பாதாம் ஆயில், முல்தானிமெட்டி ஆகியவற்றை கடலை மாவுடன் சேர்த்து ஃபேஸ் பேக்காக கலந்து காலையில் போடலாம்.
4. ஆயில் சருமம் என்றால் கடலை மாவுடன் டீ டிக்காசன் சேர்த்து ஃபேஸ் பேக் செய்து போடலாம். இது அவர்களின் முகத்தை பொலிவு பெற செய்யும்.
5. முகப்பருக்கள் நிறைய இருப்பவர்கள் கடலைமாவினை கிரீன் டீயில் கரைத்து அதை முகத்தில் பேக்காக போட்டு வந்தால் நாளடைவில் முகப்பருக்கள் காணாமல் போகும்.
முக்கிய குறிப்பு
இந்த பேக்களை தினமும் போட முடியவில்லையென்றால் வாரத்திற்கு இரண்டு தடவை சரி பயன்படுத்த வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |