சூரியக்கதிரில் இருந்து முகத்தை பாதுகாக்க வேண்டுமா? இந்த பொருட்கள் இருந்தால் போதும்
பலரும் ஒளிரும், ஆரோக்கியமான சருமத்தை அடைவதற்கு எப்போதும் விலையுயர்ந்த பொருட்கள் பயன்படுத்துவார்கள். ஆனால் இதற்கான அவசியம் இல்லை. இதற்கு தீர்வு கொடுக்கக்கூடிய பொருட்கள் நமது வீட்டிலேயே காணப்படுகின்றது.
இதில் தேன், மஞ்சள், கற்றாழை மற்றும் தேங்காய் எண்ணெய் போன்ற இயற்கைப் பொருட்கள் அடங்கும். இவை ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளதுடன் தோலில் கடுமையான இரசாயனங்கள் இல்லாமல் சருமத்தை ஊட்டமளிக்கவும் , நீரேற்றத்தை சரி செய்யவும் உதவுகிறது.
இந்த இயற்கை அழகு முறை உங்கள் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவும். இது எந்தெந்த பொருட்கள் இதற்கு பயன்படகிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
இயற்கை அழகு
தேன் பல ஊட்டச்சத்து நன்மைக்காக பயன்படும் ஒரு உணவுப் பொருளாகும். இது ஒரு இயற்கை மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது,அதே போல எலுமிச்சை சருமத்தை பிரகாசமாக்குகிறது.
எனவே சில துளிகள் எலுமிச்சை சாறுடன் ஒரு தேக்கரண்டி தேனை கலக்கவும். அதை உங்கள் முகத்தில் தடவி, 10-15 நிமிடங்களுக்கு விட்டுவிட்டு, கழுவவும். இப்படி செய்தால் வெளியில் இருக்கும் மாசுக்களில் இருந்து இத சருமத்தை பார்காக்கும்.
கற்றாழை நமக்கு சொல்லவே தேவை இல்லை இது ஒரு மருத்துவ குணம் கொண்டது. இது சருமத்தை மென்மையாக்குகிறது மற்றும் அதன் ஈரப்பதத்தை தக்கவைக்க உதவுகிறது. இதற்கு புதிய கற்றாழை ஜெல்லை பிரித்தெடுத்து உங்கள் முகத்தில் நேரடியாக தடவவும்.
பின்னர் இதை அப்படியே விட்டு 20 நிமிடங்களின் பின் கழுவவும். இதனால் தோல் நீரேற்றத்துடன் இருக்கும். மஞ்சள் சமையலுக்கு பயன்படும் ஒரு பொருள். இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன.
இது சருமத்தை ஈரப்பதமாக்கி பிரகாசமாக்குகிறது. பாலுடன் மஞ்சள் தூள் கலந்து பேஸ்ட்டாக உருவாக்கி உங்கள் சருமத்தில் தடவவும். இதன் பின்னர் 15-20 நிமிடங்களுக்குப் பிறகு கழுவவும். தேங்காய் எண்ணெய் சருமத்தை ஈரப்பதமாக்குவதற்கும் ஊட்டமளிப்பதற்கும் சிறந்தது.
உறங்கும் முன் உங்கள் தோலில் சில துளிகள் சூடான தேங்காய் எண்ணெயை மெதுவாக மசாஜ் செய்யவும். இது தோலை பளபளக்க செய்வதுடன் ஈரப்பதமாவும் வைத்திருக்கும். பப்பாளியில் இயற்கையான என்சைம்கள் உள்ளன.
இது நாம் சூரிய ஒளியில் இருந்து சருமத்தை பாதுகாக்க உதவும். இதற்கு பழுத்த பப்பாளியை மசித்து தேனுடன் கலந்து மாஸ்க் தயாரிக்கவும். இதை முகத்தில் போட்டு 15-20 நிமிடங்கள் விடவும். இப்படி செய்தால் சருமம் பளபளக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |