முகத்தை எப்பொதும் சூரிய ஒளியில் இருந்து காப்பாற்ற வேண்டுமா?
ஒமேகா 3 மற்றும் கொழுப்பு அமிலங்கள் நிறைந்த ஆளிவிதைகளை சருமத்தின் ஆரோக்கியத்திற்காக எப்படி பயன்படுத்தலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆளிவிதைகள்
பெண்கள் எப்போதும் தங்களின் சருமத்தை பாதுகாப்பதில் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். பளபளப்பான மற்றும் ஆரோக்கியமான சருமத்தை பெறுவதற்கு இயற்கை தீர்வுகளே போதுமானது.
எவ்வளவு வகையான பொருட்களை அழகிற்கு பயன்படுத்தினாலும் ஆளிவிதைகளையும் பயன்படுத்துகின்றனர். இதனால் சூரிய கதிரினால் சருமம் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்படும்.
ஆளி விதைகளில் தோலின் நச்சு நீக்க பண்புகளை வெளிப்படுத்தக்கூடிய வைட்டமின்கள், மினரல்கள், மெக்னீசியம், நீரில் கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்து, உணவு நார்ச்சத்து போன்றவை காணப்படுகிறது.
இந்த விதைகள் உடலில் ஏற்படும் அழற்சியை தணித்து அதனால் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து சருமத்தை பாதுகாக்கிறது.
ஆளி விதைகளில் காணப்படும் லிக்னன்கள் சருமத்திற்கு சேதத்தை விளைவிக்கும் ஃப்ரீ ரேடிகளுக்கு எதிராக போராடி ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை நடுநிலையாக்குகிறது.
ஆளி விதைகளில் இருந்து பிரித்தெடுக்கப்படும் ஆளி விதை எண்ணெயை சருமத்தில் தடவும் பொழுது சருமத்தில் ஏற்படும் வீக்கம் குறைந்து, சுற்றுச்சூழல் மாசுபடுத்திகளுக்கு எதிராக பாதுகாப்பு கிடைக்கிறது.
ஆளி விதை ஃபேஷியல் எண்ணெயை சீரம், மாய்சரைசர் மற்றும் ஃபேஸ் மாஸ்குகளுடன் உபயோகிக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |