கை கால் முழங்கையில் ஏற்படும் கருமையை ஒரே வாரத்தில் போக்க வேண்டுமா? எளிய வழிமுறை
பொதுவாக நிறைய பேருக்கு உடலில் கழுத்து, முழங்கை, முழங்கால் போன்ற பகுதிகள் மற்ற பகுதிகளை விட சற்று கருப்பாக இருக்கும். இதற்கு காரணம் அப்பகுதியில் ஏற்படும் வறட்சியினால் இறந்த செல்கள் தேங்கி இருப்பது தான்.
ஆனால், இந்த பகுதிகளில் உள்ள கருமையை நம் வீட்டுச் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு எளிய வழியில் வெள்ளையாக்க முடியும். * மஞ்சள் தூளை பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்.
பின் அதை முழங்கையில் தடவி நன்கு காய்ந்த பின், சோப்பு பயன்படுத்தி கழுவுங்கள். நல்ல பலன் கிடைக்க, வாரத்திற்கு பலமுறை செய்யுங்கள்.
* கடலை மாவு மற்றும் தயிரை சரிசம அளவில் கலந்து பேஸ்ட் செய்து கொண்டு முழங்கையில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் சோப்பு பயன்படுத்தி கழுவினால் நல்ல மாற்றத்தைக் காணலாம்.