பச்சை கற்பூரத்தின் நன்மைகள் - சரும அழகை இப்படியும் மேம்படுத்தலாமா?
தற்போது சரும பிரச்சனை பெரும் பிரச்சனையாக உள்ளது. ஒரு பரு வந்தாலே நமது ழுகத்தை காட்ட கொஞ்சம் வெட்கமாக உணருவோம்.
ஆனால் இப்போது இருக்கும் வாழ்க்கை முறையால் முகத்தில் பருக்கள் தழும்புகள் கொப்புளங்கள் என பல பிரச்சனைகள் வந்து தொல்லை கொடுக்கின்றன.
இதற்கு நிவாரணமாக நாம் பல விலையுளர்ந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறோம். இது தறகாலிக பலனையே கொடுக்கும் ஆனால் இயற்கையில் கிடைக்கும் சில பொருட்கள் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை தரும்.
அது தான் பச்சை கற்பூரம். இந்த பச்சை கற்பூரத்தை வைத்து முகத்தின் அழகை எப்படி மேம்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்.
பச்சை கற்பூரம்
சரும அழகை மேம்படுத்த சாதாரண கற்பூரத்தை வாங்க கூடாது. கடைகளில் விற்பனையாகும் பச்சை கற்பூரம் என கேட்டு வாங்கி அதையே பயன்படுத்த வேண்டும் . சாதாரண கற்பூரம் இதற்கு உகந்ததல்ல. முதலில் ஒரு சிறிய துண்டு பச்சை கற்பூரத்தை எடுத்து அதனை தூளாக செய்து கொள்ள வேண்டும்.
ஒரு சிறிய கிண்ணத்தை எடுத்து அதில் ஒரு மேசை கரண்டி கடலை மாவு, இரண்டு சிட்டிகை பச்சை கற்பூர தூள், ஒரு தேக்கரண்டி தேன் , மற்றும் தேவையான அளவு றோஸ் வாட்டர் என்பவற்றை சேர்த்து ஒரு கலவையாக செய்துகொள்ள வேண்டும்.
இதை அப்படியே முகத்தில் பூசி பத்து நிமிடங்களின் பின்னர் நன்கு காய்ந்ததும் சாதாரண தண்ணீரை தொட்டு மசாஜ் செய்து முகத்தை கழுவினால் உடனடியாகவே முகம் பளிச்சென்று மாறியிருக்கும். இதை நீங்கள் பார்த்து உணரலாம்.
இந்த கலவை ஒருசிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். இந்த பிரச்சனை உள்ளவர்கள் இரண்டு சிட்டிகைக்கும் குறைவான அளவு பச்சை கற்பூரம் பயன்படுத்தினாலேயே போதும்.
அப்படி இல்லை என்றால் அவ்வாறானவர்கள் கடலை மாவுக்கு பதிலாக முல்தானி மெட்டியை சேர்த்து இதை பின்பற்றலாம். சிலருக்கும் எண்ணெய் பசை போன்ற சருமம் இருக்கும். அவர்கள் அளவோடு எல்லா பொருட்களையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
றோஸ் வாட்டர் இல்லை எனில் அரிசி வடித்த கஞ்சியை கொண்டும் இந்த வழிமுறைகளை பின்பற்றலாம். முகத்தை அழகுபடுத்த விரும்பினால் இந்த அழகு குறிப்பை செய்யலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |