முட்டையில் இருக்கும் அழகுக்குறிப்புகள் என்னனு தெரியுமா? தெரிஞ்சுக்கோங்க
நாம் எல்லோரும் நமது அழகை பராமரிக்க நிறைய அழகுக்குறிப்புக்களை பின்பற்றுவோம். அவை ரசாயனமாக இருக்க கூடாது.
நமது சருமத்திற்கு உள்ளே பிரச்சனையை தராமல் இருப்பதை சிலர் விரும்புவார்கள். அந்த வகையில் வீட்டில் பல இயற்கை பொருட்களை வைத்து நாம் நமது அழகை மெருகூட்டலாம்.
ஆனால் முட்டையை வைத்து நமது அழகை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
முட்டை
முட்டையின் மஞ்சள் கருவை விட முட்டையின் வெள்ளை கருவில் அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த முட்டையின் வெள்ளை கருவை முகத்தில் பூசி ஒரு 15 நிமிடம் வைத்து விட்டு கழுவ வேண்டும்.
இதனால் சிறு வயதில் வரக்கூடிய தோல் சுருக்கம் வராமல் முகம் பார்ப்பதற்கு பளபளப்பாக இருக்கும். இந்த முட்டை வெள்ளக்கருவுடன் பேட்சௌலி எண்ணெயை சேர்த்து பூசினால் அது சருமத்திற்கு மிகவும் நல்லது.
நீங்கள் வெளியில் பல வேலைகளுக்கு சென்று வரும் சமயத்தில் உங்கள் முகத்தின் பொலிவு காணாமல் போய் விடும்.
இதற்கு முட்டையின் வெள்ளைக்கரு ஒரு டீ ஸ்பூன் எடுத்து அதனுடன் கொஞ்சம் தேனை சேர்த்து முகத்தில் தடவி ஒரு கொஞ்ச நேரத்தின் பின்னர் கழுவினால் முகம் மீண்டும் உங்கள் பொலிவை பெறும்.
சிலருக்கு முகத்தில் பரு பிரச்சனை ஆனால் சிலருக்கு முகத்தில் துளைப்பிரச்சனை இந்த துளை பிரச்சனை முகத்தில் அருகே பார்க்க முடியாத அளவிற்கு அசிங்கமாக தெரியும்.
இதற்கு ரு டீ ஸ்பூன் வெள்ளைக் கருவுடன் ஒரு டீ ஸ்பூன் சர்க்கரை மற்றும் சோளமாவை சேர்த்து முகம் முழுவதும் தடவி சிறுது நேரம் கழித்து கழுவி விடுங்கள்.
பலருக்கு எண்ணெய் வடிந்த முகம் இருக்கும் இந்த பிரச்சனைக்கு அரை டீ ஸ்பூன் எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன் முல்தானி மெட்டி மற்றும் ஒரு டீ ஸ்பூன் தேனை சேர்த்து நன்கு கலக்கி முகம் முழுவதும் தடவி பின்னர் கழுவி விட வேண்டும்.