சர்க்கரை நோயாளி கரும்புச்சாறு குடிக்கலாமா?
கோடைகாலம் என்றாலே கரும்புச்சாறு தான் சிறந்த தேர்வாக இருக்கும். கரும்பில் இரும்புச்சத்து, மெக்னீசியம், கால்சியம் மற்றும் எலக்ட்ரோலைட்டுகளும் ஏராளமான ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் நிறைந்ததுள்ளது.
இப்படி நன்மைகள் தரக்கூடிய கரும்பு ஜீஸ் நாம் எவ்வாறு எடுத்து கொள்ளலாம் இதனால் என்ன பயன் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
கரும்பு ஜீஸ்
கரும்பு ஜீஸ் இனிப்பாக இருக்கும். இந்த ஜீஸை குடிப்பதால் மலச்சிக்கலை போக்குவதுடன், வயிற்றில் ஏற்படும் பாக்டீரியா தொற்றுக்களையும் இந்த கரும்பு சாறு தடுத்து நிறுத்துகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. பெண்கள் மாதவிடாய் வருவதற்கு முன்னரே கரும்பு ஜீஸ் குடித்து வந்தால் அது அவர்களின் நலத்தில் பங்கெடுக்கும்.
கல்லீரல், சிறுநீரகம் போன்ற உள்ளுறுப்புகளின் செயல்பாட்டுக்கு கரும்பு மிகவும் நல்லது. மஞ்சள் காமாலை வந்தால் உடனே அவர்கள் கரும்பு ஜீஸ் குடித்தால் அதிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்று முதல், சிறுநீரகத்தில் உள்ள கற்கள் வரை கரைத்து வெளியேற்றும் தன்மை கொண்டது இந்த கரும்பு.
இதில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால் பற்களும், ஈறுகளும் உறுதியாகிறது. மூளையின் செயல்பாட்டை அதிகரித்து, நம்மை சுறுசுறுப்புடன் இயங்க செய்ய கரும்பு சாறு உதவுகிறது.
சரும பாதுகாப்பை மேம்படுத்துகிறது. இது கிளைசெமிக் அதிகம் நிறைந்த பண்புகளை கொண்டது. இதில் இயற்கையான சக்கரை காணப்படுகின்றது.
சர்க்கரை நோயாளிகள் கரும்புச்சாறை மிதமான அளவில் குடித்து வந்தால் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முடியும். ஆனால் சக்கரை நோயாளிகள் கரும்பு சாறு அதிகமாக குடிக்க கூடாது.
வாரத்திற்கு ஒரு முறை அரை கிளாஸ் குடிக்க வேண்டும் என்பது மருத்துவ விளக்கம்.