ஒரே வாரத்தில் இப்படி இருந்த உங்க முகம் மாறனுமா? இந்த 1 விதையை மட்டும் வீட்டுல வச்சுக்கோங்க!
முகத்தில் இருக்க கூடிய பிரச்சினைகளை தீர்க்க ஆங்கில மருத்துவத்தை விடவும் சில எளிய வழி உள்ளது.
முகத்தில் சாதாரணமாக ஒரு சின்ன கீறல் விழுந்தால் கூட அதை நம்மால் தாங்கி கொள்ள இயலாது.
அப்படி இருக்க முகத்தில் பருக்கள், வெடிப்புகள், கரும்புள்ளிகள், கொப்புளங்கள் போன்றவை ஏற்பட்டால் அவ்வ்ளவு தான்.
இந்த பிரச்சினைகள் அனைத்திற்குமே சாதாரணமாக கிடைக்க கூடிய ஒரு வகை மூலிகை பழத்தில் தீர்வு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பருக்களை ஒழிக்க
முகத்தில் சேர்ந்துள்ள பருக்களை நீக்க நாவலின் இந்த குறிப்பு உதவும்.

தேவையான பொருட்கள்
- நாவல் விதைகள்
- பசும்பால் 2 ஸ்பூன்
- ஆரஞ்சு தோல்
- பாதாம் எண்ணெய்
- சிறிது பன்னீர்
- சிறிது மைசூர் பருப்பு
- பொடி 1 ஸ்பூன்
தயாரிப்பு முறை
முதலில் நாவல் பழத்தின் விதையை மட்டும் தனியாக எடுத்து, காய வைத்து பொடி போன்று தயாரித்து கொள்ளவும்.
அடுத்து இதனுடன் பால் சேர்த்து முகத்தில் தடவி வந்தால் பருக்கள் நீங்கும். இதற்கு மாறாக பொடி செய்த நாவல் விதை, பொடி செய்த ஆரஞ்சு தோல், பாதாம் எண்ணெய், பன்னீர், பொடி செய்த மைசூர் பருப்பு ஆகியவற்றை கலந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து நீரால் கழுவலாம்.

இதுவும் பருக்களை விரைவிலே ஒழித்து கட்டும் எளிய வழி.