குழந்தைகளுக்கான சூப்பரான பிரேக்பாஸ்ட்! பத்தே நிமிடத்தில் செய்யலாம்
பொதுவாக குழந்தைகள் உள்ள வீடுகளில் காலையுணவு முதல் இரவு வரை அவர்களை சாப்பிட வைக்க வேண்டும் என்றால் அதற்கு தனி ஒரு சவால் தான்.
ஆனால் நாம் செய்யும் உணவுகளை பொருத்து தான் அவர்கள் சாப்பிடுவார்களா? இல்லையா? என்று தீர்மானிப்பார்கள்.
குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவுகள் சுவையாகவும் நிறங்களால் கவர் செய்யப்பட்டதாகவும் இருக்க வேண்டும். அப்போது தான் அவர்களை சாப்பிட வைக்க வேண்டும்.
அந்த வகையில் குழந்தைகளுக்கான சுவையான கேரட் - பீன்ஸ் சாதம் எவ்வாறு செய்வது என்பது குறித்து தொடர்ந்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
தக்காளி விழுது (பியுரி) - 1/2 கப்
அரிசி - 3/4 கப்
சீரகம் - 1 தேக்கரண்டி
வெங்காயம் - 1
இஞ்சி - பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
கேரட் - 2
பீன்ஸ் - 5 கிராம்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தயாரிப்பு முறை
முதலில் அரிசியை நன்றாக கழுவி, அதனை ஊற வைத்து கொள்ளவும். இதனை தொடர்ந்து வெங்காயம், தக்காளி என்பவற்றை பொடியாக நறுக்கியதுடன், பீன்ஸ், கேரட்டை நீள்மாக வெட்டிக் கொள்ளவும்.
இதன் பின்னர் அடுப்பில் குக்கரில் எண்ணெயை விட்டு, சீரகம், வெங்காயம், இஞ்சி - பூண்டு ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதனுடன் கேரட், பீன்ஸ் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.
காய்கறிகள் வதங்கியதும், தாக்காளி விழுது, உப்பு, மிளகாய் தூள், எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து, அரிசியையும் சேர்த்து 3 கப் தண்ணீர் விட்டு குக்கரை மூடி போட்டு 3 விசில் வந்ததும் 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து வேக விட்டு இறக்கவும்.
10 நிமிடங்களுக்கு பின்னர் இறக்கினால், சூப்பரான குழந்தைகளுக்கு சத்தான கேரட் - பீன்ஸ் சாதம் தயார்!