ரோகித் சர்மாவுக்கு அடித்த அடுத்த ஜாக்பாட்! இனி கோலி அதற்கும் கேப்டன் இல்லையா?
கொரோனாவின் உருமாற்றமான ஓமிக்ரோன் வைரஸ் உலகமெங்கும் பரவி வருவதால், பல நாடுகளில் விமான பயண கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளது. அந்த வகையில், விளையாட்டு போட்டிகளிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
இந்திய அணி நியூசிலாந்து (indvsnz) அணி டெஸ்ட் தொடரை முடித்த கையோடு தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்றகொள்ள இருக்கிறது. ஏற்கனவே ஓமிக்ரோன் வைரஸ் பரவுவதால் இந்திய அணி தொடர் பாதிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி இருந்தது.
மேலும், அந்நாட்டில் ஓமிக்ரோன் வைரஸ் அதிகமாக பரவி வருவதால் போட்டிகள் அட்டவணை தற்போது மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. அதன் படி, இந்திய அணி வரும் டிசம்பர் மாதம் 16-ம் தேதியில் புறப்பட இருக்கிறது.
இதனிடையே வீரர்களை தேர்வு செய்யும் அவசரக்குழு இன்று நடைப்பெறுகிறது. இந்த அழைப்பில், இந்திய அணியின் பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டும், விராட்கோலியும் அழைக்கப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களுடன் ரோகித் சர்மாவை அழைக்கப்பட்டிருக்கும் விஷயம் தான் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த அவசரக்குழு கூட்டத்தில், முக்கியமாக வீரர்களின் தேர்வு மட்டுமின்றி, கேப்டன்களின் மாற்றம் குறித்தும் இறுதி முடிவுகள் எடுக்கப்பட உள்ளார்களாம். அதில், ஒருநாள் மற்றும் டி20 போட்டிக்கு தனித்தனியான கேப்டன்கள் இருந்தால் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும் என்பதால் ஒரே கேப்டனை நியமிக்க பிசிசிஐ (BCCI) முடிவுவெடுக்க இருக்கிறது.
தெளிவாக சொல்லவேண்டும் என்றால், விராட்கோலியின் ஒரு நாள் கேப்டன் பதவியையும் பறித்து, ரோகித் சர்மாவிடமே கொடுக்க இருக்கிறார்களாம். இதனால் தென்னாப்பிரிக்கா தொடரில் ரோகித் கேப்டனாக இருக்க வாய்ப்பு உள்ளது போல் தெரிகிறது.

இதுமட்டுமின்றி டெஸ்ட் துணை கேப்டன் பதவியில் இருக்கும் ரகானேவின் பதவியை பறித்து ரோகித்திடம் வழங்க உள்ளார்கள். இதன் காரணமாகவே ரோகித் சர்மாவுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்கள். இதற்கு எல்லாம் ஒரு முக்கியகாரணமாக 2022-ம் ஆண்டிற்கான இந்திய அணியின் 9 ஒரு நாள் போட்டியும், அதிகப்படியான டி20 போட்டியும் வர உள்ளன.
அதற்காக, ரோகித் சர்மாவிடம் கேப்டன்சியை ஒப்படைத்தால், உலககோப்பை போட்டிக்கு தயாராவதற்கு முழு அவகாசம் கிடைக்கும் என பிசிசிஐ-யின் கணிப்பாகவே உள்ளது.

ஏற்கனவே, கேப்டன் மன அழுத்த பொறுப்பால் விராட் கோலி, ஐபிஎல் மற்றும் டி20-யின் போட்டிக்கான கேப்டன்சியில் இருந்து விலகினார். பேட்டிங்கில் கவனம் செலுத்த இதை செய்ததாக கூறினார்.
ஆனால், அவர் டெஸ்ட் அணியிலும், மற்றும் ஒரு நாள் போட்டியிலும், சிறந்த கேப்டனாக தான் விளங்குகிறார். இதனால் இந்த சமயத்தில் ரோகித்திடம் அனைத்தும் ஒப்படைத்தால் அவரின் பேட்டிங் திறனும் பாதிக்கப்படும் என்பதே முன்னாள் வீரர்களின் கருத்தாக இருக்கிறது.