BCCI-ல் குவிந்து கிடக்கும் கோடிகள்.. bank balance எவ்வளவு தெரியுமா?
BCCI வங்கி கணக்கில் உள்ள கோடிக்கணக்கான பணத்தில் மதிப்பு தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
BCCI நிறுவனம்
இந்தியாவில் உள்ள சர்வதேச, உள்நாட்டு, மற்றும் இளையோர் ஆகிய கிரிக்கெட் போட்டிகளுக்கு BCCI தான் வங்கி நிறுவனத்தை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிறுவனம் இந்தியாவின் தேசிய விளையாட்டு கூட்டமைப்பின் கீழ் வராது என்றும் கூறப்படுகிறது.
நாம் நினைப்பது போன்று அல்லாமல் கிரிக்கெட் விளையாட்டை ஒழுங்குபடுத்துதல், விதிகளை உருவாக்குதல் மற்றும் போட்டி நடைபெறும் இடங்கள் அங்கீகரிப்பு போன்ற முக்கிய பொறுப்புக்களை BCCI நிறுவனம் செய்து வருகிறது.
அந்த வகையில், BCCI நிறுவனம் பற்றிய மேலதிக தகவல்களை தொடர்ந்து எமது பதிவில் பார்க்கலாம்.
ரஞ்சி டிராபி, துலீப் டிராபி, ஐபிஎல், மகளிர் பிரீமியர் லீக் (WPL) போன்ற பெரிய அளவிலான உள்நாட்டுப் போட்டிகளை நடத்தும் BCCI இளம் விளையாட்டு வீரரர்களை அறிமுகப்படுத்தும் தளமாகவும் இயங்கி வருகிறது.
மேலும், இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு அணிகளாக பயணம் செய்யும் கிரிக்கெட் வீரர்களுக்கான போட்டிகளை நிர்வகிக்கும் வேலையையும், பயணங்களை திட்டுமிடுவதற்கான வேலையையும் இது செய்கிறது.
வங்கி கணக்கில் உள்ள பணம் எவ்வளவு?
இவ்வளவு முக்கிய பொறுப்புக்களை செய்து வரும் BCCI நிறுவனம் கிரிக்கெட் விளையாட்டுடன் தொடர்பிலான ஒளிபரப்பு உரிமை, விளம்பரங்கள், ஸ்பான்சர்ஷிப்கள் மற்றும் டிக்கெட் விற்பனை ஆகிய வழிகளில் கோடிக்கணக்கில் பணம் சம்பாரிக்கின்றது. இதனால் உலக பணக்கார கிரிக்கெட் வாரியங்களில் ஒன்றாகவும் உள்ளது.
கடந்த நிதியாண்டில் இந்திய அணிக்கு மாத்திரம் ரூ. 4,193 கோடி வருமானம் கிடைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில், BCCI வங்கிக் கணக்கில் 20 ஆயிரத்து 686 கோடி ரூபாய் பணம் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த செய்தி கிரிக்கெட் ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளது. “இவ்வளவு பணம் இங்கு எப்படி வந்திருக்கும்..” என்ற கேள்வியும் உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
