Glenn Maxwell BBL Record; டி20-யில் 154 ரன்கள் அடித்து சாதனை படைத்த மேக்ஸ்வெல்;
ஆஸ்திரேலியா பிக்பாஸ் கிரிக்கெட் லீக் போட்டியில் இன்று மேகஸ்வெல் தலைமையிலான மெல்பேர்ன் ஸ்டார்ஸ் அணி, ஹோபர்ஸ் ஹரிக்கேன்ஸ் அணியை எதிர்கொண்டது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மேகஸ்வெல் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கிய அவர், ஹரிக்கேன்ஸ் பந்துவீச்சாளர்களை துவ்சம் செய்தார். அதன்படி, சிக்ஸர் பவுண்டரி என விளாசி கிட்டத்தட்ட 64 பந்துகளில் 154 ரன்களை விளாசி, கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
அவருடன் கூட்டணி அமைத்த மார்கஸ் ஸ்டொயினஸூம், தனது பங்கிற்கு வெளுத்து வாங்கினார். அவர் 31 பந்துகளில் 75 ரன்களையும் விளாசினார். இருவரும் ஜோடி சேர்ந்து ஹரிக்கேன்ஸ் பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்ததில், மெல்பேர்ன் ஸ்டார்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 273 ரன்களை குவித்தது.
இதனால், மேக்ஸ்வெல் மற்றும் மெல்பேர்ன் ஸ்டார்ஸ் அணி பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. மேலும், பிக்பாஷ் கிரிக்கெட் தொடரில் தனி ஒரு வீரர் விளாசிய அதிகபட்ச ஸ்கோராக மேக்ஸ்வெல்லின் 154 ரன்கள் பதிவானது.
ஒரு அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோராக மெல்பேர்ன் ஸ்டார்ஸ் எடுத்த 273 ரன்கள் பதிவானது. இதனைத்தொடர்ந்து, இமாலய இலக்கை நோக்கி ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி களமறிங்கி 167-6 தோல்வியை சந்தித்தது.
அந்த அணியில் அதிகப்பட்சமாக மெக்டெர்மாட் 55 ரன்களும், டி சார்ட் 41 ரன்களை குவித்தனர். இதன் மூலம் 106 ரன்கள் வித்தியாசத்தில், மெல்போர்ன் அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
Six from stoinis to end 19th over #Stoinis #Maxwell #bbl #BBL11 #BBL2021 #glennmaxwell pic.twitter.com/xkzRudBv6v
— Shivam Devgan (@ShivamDevgan95) January 19, 2022