Bigg Boss 8: போட்டியாளர் ராணவின் தந்தை பிரபல அரசியல்வாதி.., அவர் யார்?
தமிழ் சின்னத்திரையில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் ஒன்று பிக்பாஸ்.
இந்த சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை சுவாரசியம் குறையாமல் நடிகர் விஜய்சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் 6 வைல்டு கார்டு போட்டியாளர்களும் எண்ட்ரி கொடுத்ததார்கள்.
6 வைல்டு கார்டு போட்டியாளராக ராணவ், ரயான், மஞ்சூரி, ரியா, வர்ஷினி, சிவா ஆகியோர் வந்தனர்.
அதில் ரியா,வர்ஷினி, சிவா என்ற மூன்று வைல்டு கார்ட போட்டியாளர்கள் அடுத்தடுத்து வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சி 70 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.
இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் ராணவ் டாஸ்க் விளையாடி கொண்டிருந்தபோது ராணவ் கைகளில் காயம் ஏற்பட்டிருக்கிறது.
அதுபோல ராணவ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்த நாளிலிருந்து பல போட்டியாளர்கள் அவரை ஒதுக்கி வைத்தனர்.
நேற்று டாஸ்கில் ராணவ் கையில் அடிபட்டபோது கூட சௌந்தர்யா, அன்ஷிதா, ஜெஃப்ரி போன்றோர் ராணவ் நடிக்கிறான் என்று சொல்லிக் கொண்டிருந்தனர்.
பிறகு உண்மையில் ராணவ்க்கு அடிபட்டு அவர் மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார் என்று தெரிந்த பிறகு கூட ஜெஃப்ரி, சௌந்தர்யா அலட்சியமாக நடந்து கொண்டனர்.
இப்படிப்பட்டநிலையில் ராணவ்வின் அப்பா யார் என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.
ராணவ் அப்பாவின் பெயர் கராத்தே சந்துரு.ராணவ் வீட்டில் மூன்று குழந்தைகளாம். ராணவ் தான் மூத்தவர், அவருக்கு ஒரு தம்பியும், ஒரு சகோதரியும் இருக்கிறாராம்.
ராணாவின் அப்பா சந்துருவிற்கு ஆரம்பத்திலே அரசியல் ஆர்வம் வந்ததால் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து வடசென்னை மாவட்ட செயலாளராக சில வருடங்கள் இருந்திருக்கிறார்.
மேலும், ராணவிற்க்கு பிக்பாஸ் வீட்டிற்குள் அடிபட்டு இருப்பதை பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது என்று அவருடைய அப்பா கூறியிருக்கிறார்.