கமலின் அறிவுரையுடன் பிக் பாஸில் இருந்து வெளியேறியது இவர் தான்?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இன்று அனைவரும் எதிர்ப்பார்த்த போட்டியாளர் அபினய் வெளியேறியுள்ளார்.
இதனை உத்தியோகபூர்வமாக நடிகர் கமல் அறிவித்தார்.
வெளியேற்றம் குறித்து போட்டியாளர்களிடம் கேள்வி எழுப்பும் போது சஞ்சீவ், ராஜூ போன்றோரை தவிர அனைவரும் அபினய் தான் வெளியேற போவதாக சரியாக கணித்திருந்தனர்.

கடந்த சில வாரங்களாக பாவனி சர்ச்சையில் சிக்கியது தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகின்றது.
இதேவேளை, விடைபெறும் போது, “கமல் சாரையும், ஹவுஸ்மேட்ஸையு மிஸ் பண்ணுவேன்.” என கூறிய அபினய், ராஜூவிடம், “நீ பல நேரத்தில் சொன்ன விஷயங்கள் உண்மை. அதை முகத்துக்கு நேரே ஒப்புக்கொள்ள நான் தயங்கி இருக்கிறேன். ஆனால் தாமதமாகவே நீ சொல்லும் விஷயங்கள் எனக்கு புரியவந்தது. இன்னும் கொஞ்சம் உன்னிடம் கற்றிருக்கலாம் நிறைய” என குறிப்பிட்டார்.
வழமை போல வெளியேறிய போட்டியாளருக்கு குறும்படத்தினை போட்டுக்காட்டி பல அறிவுரைகளை கூறி நடிகர் கமல் அபினயையும் அனுப்பி வைத்தார்.