தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு!
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 டைட்டில் வின்னர் முத்துக்குமரன் மீது சமூக வலைதளங்களில் வஹிதா என்ற பெண் திருமணம் செய்துக்கொள்வதாக கூறி தன்மை ஏமாற்றிவிட்டதாக குற்றச்சாட்டை முன்வைத்து வெளியிட்டுள்ள காணொளி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வைரலாகும் காணொளி
பேச்சுப் போட்டிகள் மற்றும் சமூக வலைதளங்களில் முற்போக்கு கருத்துகளை பகிர்ந்து பிரபலமான முத்துக்குமரன், பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகும் பல்வேறு சமூக விவகாரங்கள் குறித்து தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்.

இந்நிலையில், முத்துக்குமரன் தன்னை காதலிப்பதாக கூறி நெருக்கமாக பழகியதாகவும், திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னுடன் உடல் ரீதியாக தொடர்பில் இருந்ததாகவும் வஹிதா வீடியோ மூலம் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், அவர் தன்னை ஏமாற்றிவிட்டதாகக் கூறி மன அழுத்தத்தில் இருப்பதாகவும், உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சிக்கும் காட்சிகளையும் அந்த வீடியோவில் இணைத்துள்ளார். பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர் பிழைத்துள்ளதாக தெரியவருகின்றது.

வீட்டில் வைத்து எனக்கு ஆயிரமாயிரம் முத்தம் கொடுத்தார். நிறைய காதல் கொடுத்தார். அதற்காகத்தான் நான் காத்திருந்தேன். என்னை கிண்டல் செய்தாலும் பரவாயில்லை. நானும், அவரும் உடல் ரீதியான தொடர்பும் வைத்துக்கொண்டோம்.
ஏற்கனவே ஒரு காதல் தோல்வியில் நான் இருக்கிறேன் என அவருக்கு தெரியும். என்னை பேசியே மயக்கிவிட்டார். நான் தாலி கட்டுவிடுவேன் என சொல்லி எக்கச்சக்க முத்தங்கள் கொடுத்தார். ஆண்களை நம்பக்கூடாது என எல்லோரிடமும் சொல்வேன். நானே இப்படி ஆகிவிட்டேன் என காணொளி வெளியிட்டுள்ளார்.

இந்த குற்றச்சாட்டுகளை முத்துக்குமரன் மறுத்துள்ளார். தானும் வஹிதாவும் நல்ல நண்பர்கள் என்றும், அவர் ஏன் இவ்வாறு செய்தார் என்பது தனக்கு தெரியவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும், அவர் ஏற்கனவே மனதளவில் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சிலர் முத்துக்குமரனை விமர்சித்தும், சிலர் குற்றச்சாட்டுகள் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இருப்பினும், வஹிதா கூறியுள்ள குற்றச்சாட்டுகளில் உண்மை என்ன என்பதும், இருவருக்கும் இடையே உண்மையில் என்ன நடந்தது என்பதும் உரிய விசாரணைக்குப் பின்னரே உறுதியாக தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |