நடிக்கிறவங்கள எழுப்பலாமா? வெளியேறிய போட்டியாளர்; எச்சரிக்கை விடுத்த சிம்பு!
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியானது 5 வாரங்களை கடந்துவிட்ட நிலையில், இந்த வாரம் எந்த போட்டியாளர் வெளியேறப்போகிறார் என்ற ஆர்வம் அனைவருக்கும் எட்டியுள்ளது.
இதுவரை சுரேஷ் சக்கரவர்த்தி, சுஜா வருணி, ஷாரிக், அபினய், வனிதா விஜயக்குமார், தாடி பாலாஜி, ஆகியோர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி உள்ளனர்.
இந்த வாரத்தில், சுருதி, சினேகன், ஜுலி, பாலாஜி முருகதாஸ் ஆகிய நான்கு பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
வெளியேறினாரா சினேகன்?
இவர்களில் யார் இந்த வாரம் வெளியேற போகிறார் என்பதை அனைவரும் எதிர்பார்த்துள்ளனர்.
அந்த வகையில் சினேகன் வெளியேற்றப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
எச்சரித்த சிம்பு
மேலும், இன்றைக்கான ப்ரோமோவில் பேசிய சிம்பு, தூங்கிறவங்கள எழுப்பியாச்சு...
ஆனால் தூங்கிய மாறி நடிக்கிறவங்கள எழுப்பலாமா? என போட்டியாளர்களை எச்சரிக்கை விடுத்துள்ளார்.