அறைஞ்சுருவேன் உன்னை! நிரூப் பாலா இடையே வெடித்த பிரச்சினை; அதிர்ச்சியில் போட்டியாளர்கள்
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியானது பரபரப்பாக சென்றுக்கொண்டிருக்கிறது. முட்டை டாஸ்கில் எல்லா சீசன்லிலும் சண்டை ஏற்பட்டுகொண்டு தான் இருக்கும்.
அந்த வகையில், இன்றைய நிகழ்ச்சியின் டாஸ்கில் போட்டியாளர் கடுமையாக விளையாடுகையில், பாலா, நிரூப்பை தாக்கியதாக, சண்டையிடுகிறார்.
அதற்கு பாலா நான் உன்னை அடிக்கலை எனக்கூற, அறைஞ்சிருவேன் உன்னை, அடிக்கிற வேலை வைச்சுக்காத, இந்த வீட்டில் அது தப்பு என நிரூப் கொதித்தெழுகிறார்.
பாலாவும் விடாப்பிடியாக அடிடா? முடிஞ்சா அடிடா என கத்துகிறார். உடனே மற்ற போட்டியாளர்கள் தடுத்து நிறுத்திவிடுகிறார்கள்.
தொடர்ந்து போட்டியாளர்கள் இடையே பிரச்சினை வெடித்து சண்டையாக உருவாகியுள்ளது. இதனால் இன்றைய நிகழ்ச்சி பரபரப்பாக செல்லும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.