10 ஆண்டுக்கு பின் திரும்பி வந்த தந்தை... பிக்பாஸ் மேடையில் கதறி அழுத அபிராமி!
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியானது ஹாட்ஸ்டாரில் ஒளிப்பரப்பட்டு, தற்போது 70 நாட்களை கடந்த நிலையில், பாலாஜி முருகதாஸ் டைட்டிலை வென்றார். 14 போட்டியாளர்களுடன் 70 நாட்கள் மட்டுமே நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில், பிக் பாஸ் பைனலுக்கு 6 போட்டியாளர்கள் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இறுதி வாரத்தில் தாமரை, ரம்யா பாண்டியன், நிரூப், பாலா ஆகிய 4 போட்டியாளர்கள் இருந்தனர். அதன்படி, தாமரைச் செல்விக்கு 4-வது இடமும், ரம்யா பாண்டியனுக்கு 3-வது இடமும் கிடைத்தது.
நிரூப் -2வது இடமும் கிடைத்தது. இதில் அதிக வாக்குகளை பெற்று வின்னராக பாலா அறிவிக்கப்பட்டுள்ளார். மேடையில், நடைபெற்ற பைனலில் அபிராமியை மேடைக்கு அழைத்து சிம்பு பேசினார்.
அபிராமியின் தந்தை வருகை
அப்போது, 10 ஆண்டுகளுக்கு மேலாக அபிராமியின் குடும்பத்தை பிரிந்து வாழ்ந்த அவரது அப்பாவை சிம்பு மேடைக்கு அழைத்தார். இதை சற்றும் எதிர்பாராத அபிராமி, கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
மேலும், இத்தனை காலம் குடும்பத்தை பிரிந்து இருந்த அப்பாவை எப்படி மிஸ் செய்தேன் என்பது எனக்கு மட்டுமே தெரியும் என அபிராமி உருக்கமாக பேசினார்.
அப்பா இல்லாமல் நான் அதிகம் கஷ்டப்பட்டு இருக்கிறேன். நன் துணிச்சலுடன் பல்வேறு விஷயங்களை கடந்து வந்திருக்கிறேன்.
ஆனால் அப்பா இல்லாததால் அதிகம் கஷ்டப்பட்டிருக்கிறேன். என்றார். அவரைப்போல் அபிராமியின் அம்மாவும் கண்ணீர் விட்டு பேசினார்.
கணவர் இல்லாமல் இரண்டு குழந்தைகளை மிகவும் சிரமமாக வளர்த்துள்ளேன். அந்த கஷ்டத்தை நான் பட்டிருக்கிறேன்.
அவர் திரும்பி வந்து ஒரு வாரம் தான் ஆகிறது. இனி மேலாவது என் குழந்தைகளுக்கு அவரது பாசம் கிடைக்கும் என உருக்கமாக பேசியிருந்தார்.