கோபத்தின் உச்சத்தில் ரம்யாகிருஷ்ணன்: அரங்கத்தை விட்டு வெளியேறிய வனிதா! பரபரப்பு காட்சி
தற்போது தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோக்கள் அதிக அளவு மக்களிடையே ஆர்வத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில் பிரபல ரிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மக்களிடையே பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.
பிக் பாஸ் சீசன் 3ல் பங்கு பெற்று பிரபலமான வனிதா விஜயகுமார் அடுத்தடுத்து பல நிகழ்ச்சியில் பங்கு பெற்றதோடு, பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திறமையினை காட்டியுள்ளார்.
எந்தவொரு விஷயத்தையும் நேர்படப் பேசும் வனிதா விஜயகுமார் பல நேரங்களில் மற்றவர்களின் எதிர்ப்பையும் ஆதரவையும் பெற்றுள்ளார்.
இந்நிலையில் பிரபல ரிவியின் பிக் பாஸ் ஜோடிகள் குறித்து ஒரு ப்ரோமோ வெளியிட்டதில் மக்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளியான ஒரு மணி நேரத்தில் லட்சக்கணக்கான பார்வையாளர் அவதானித்துள்ளனர்.
‘ காட் வித் டெவில் ‘என்ற ரவுண்டில் காளி வேடமிட்டு நடனமாடுகிறார் வனிதா விஜயகுமார் பின்பு நடுவர்கள் வனிதாவை மற்ற போட்டியாளர்களுடன் ஒப்பிட்டு பேசியதை பொறுத்துக்கொள்ள முடியாமல் வனிதா கோபமடைந்தார்.
வனிதாவின் கோபத்திற்கு பதில் அளிக்குமாறு ரம்யா கிருஷ்ணன் பல மடங்கு தனது கோபத்தினை வெளிப்படுத்தி கம்பீரமாக காணப்படும் புதிய ப்ரொமோ தற்போது வெளியாகியுள்ளது.