பிபி ஜோடியில் முதல் பரிசை வென்றது யார் தெரியுமா? லீக்கான புகைப்படம்..
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிய டிடி ஜோடியின் நிகழ்ச்சியில் வெற்றியாளராக அனிதா, ஷாரிக் இருவரும் முதல் பரிசை பெற்றுள்ளனர்.
தற்போது பெரும்பாலான ரிவி ரியாலிட்டி நிகழ்ச்சியினை கொடுத்து மக்களின் வரவேற்பினை பெற்று வருகின்றது.
இந்நிலையில் பிரபல டிவியில் கடந்த 4 வருடங்களாக ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்று வருகிறது. குறித்த 4 சீசன் போட்டியாளர்களைக் கொண்டு பிபி ஜோடிகள் என்ற புதிய நிகழ்ச்சியினை தொடங்கியது.
ரம்யா கிருஷ்ணன் மற்றும் நகுல் நடுவர்களாக பங்கேற்ற இந்த டான்ஸ் நிகழ்ச்சியில் ஷிவானி - சோம்சேகர், கேப்ரில்லா – ஆஜித், வனிதா -சுரேஷ் சக்ரவர்த்தி, அனிதா சம்பத் வனிதா ஷாரிக், அறந்தாங்கி நிஷா – தாடி பாலாஜி, சம்யுக்தா – ஜித்தன் ரமேஷ், பாத்திமாபாபு – மோகன் வைத்தியா, ஜூலி – சென்றாயன் ஆகிய பலர் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். அதில் ஷிவானி மற்றும் வனிதா தாங்களாகவே நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்கள்.
மேலும், பாத்திமா பாபு – மோகன் வைத்தியா மற்றும் ஜூலி – சென்றாயன் ஜோடி எலிமினேட் ஆகிய நிலையில் மீதமுள்ள ஜோடிகள் இறுதி போட்டிக்கு தகுதியான நிலையில் இன்று ஒளிபரப்பாகியுள்ளது.
இதில் அனிதா – ஷாரிக் ஜோடி முதல் இடத்தை பிடித்துள்ளனர். இவர்களுக்கு முதல் பரிசாக மூன்று லட்ச ரூபாய் வழங்கப்பட்டது.
மேலும், இந்த சீசனில் இரண்டு பேருக்கு இரண்டாம் பரிசை அறிவத்து இருக்கின்றனர். அது ஆஜீத் – அறிவத்து மற்றும் ஜித்தன் ரமேஷ் – சம்யுக்தா. இந்த இரண்டு ஜோடிக்கும் இரண்டாம் பரிசாக இரண்டு லட்ச ரூபாய் பரிசாக கொடுக்கப்பட்டுள்ளது.
