கடுப்பான பிரியங்கா... தாமரைக்கு பணம் கொடுத்த பிக் பாஸ் பெண் போட்டியாளர்! மேடையில் அவிழ்ந்த உண்மை
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தாமரை மக்கள் மத்தியில் நல்ல இடத்தினை பிடித்தார்.
தற்போது பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2வில் தன் கணவருடன் ஜோடி போட்டு நடனமாடி வருகிறார்.
இந்த நிகழ்ச்சியில் ஐக்கி பெர்ரி பற்றியும், அவருடனான நட்பு பற்றியும் சில தகவலை கூறி உருக வைத்துள்ளார்.
அதாவது, நிகழ்ச்சிக்கு பிறகு எனக்கு அதிகமாக கூடவே இருந்து பார்த்து கொண்டது ஐக்கி தான். எனக்கு என்ன வேண்டுமோ அதை செய்து கொடுத்தார்.
நான் வீட்டுக்கு கிளம்பும் போது கூட எனக்கு காசு கொடுத்து அனுப்பி வைப்பாள். அதனால் அவரை ரொம்ப பிடிக்கும் என்று கண்ணாடி மாட்டிவிட்டு கட்டியணைந்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
இதன் மூலம் கடுப்பாகிய பிரியங்கா முகத்தில் சில ஏமாற்றமும் பொறாமையும் தெரிகின்றது. ஒரு வேளை அவரின் பெயரை கூறுவார் என்று எதிர்ப்பார்த்தாரோ..