ரம்யா கிருஷ்ணனால் நொறுங்கி போன ராஜூ.....சத்தமில்லாமல் நாரதர் வேலை பார்த்த பிரியங்கா!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் BB ஜோடிகள் நிகழ்ச்சியில் ராஜூ ஜெயமோகன் செய்யும் சேட்டைகளும் குறும்புகளும் அடங்கிய புதிய ப்ரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது.
முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர்கள் பங்கேற்கும் இந்த BB ஜோடிகள் நிகழ்ச்சியின் 2வது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.
இதில் முந்தைய பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தத்தம் இணையுடன் நடனம் ஆடி கலக்கி வருகின்றனர்.
இதில் ராஜூ ஜெயமோகன் மற்றும் பிரியங்கா இருவரும் நிகழ்ச்சியை கலகலப்பாக எடுத்துச் செல்கின்றனர்.
நடுவராக நடிகை ரம்யா கிருஷ்ணன் வீற்றிருக்கிறார்.
இந்த நிகழ்ச்சியின் ஒரு அங்கமாக நடிகர் ராஜூ ஜெயமோகன், பாபா பட ரஜினி கெட்டப்பில் தோன்றி அவர் போலவே தனக்குள்ளேயே மந்திரம் சொல்லி பலூன் ஒன்றை தன்னிடம் வரவழைத்தும், தன்னிடம் இருந்து போகவைத்தும் மேஜிக் பண்ணி அசத்துகிறார்.
பின்னர் அந்த பலூனை ரம்யா கிருஷ்ணனுக்கு சென்று வழங்க அது உடைந்ததும் மனம் உடைந்து போகிறார் (காமெடியாக).
இப்படி இந்நிகழ்ச்சியில் ராஜூவின் குறும்புகளும் அட்ராசிட்டியும் நிகழ்ச்சியை கலகலப்பாக எடுத்துச் செல்கிறது.