தாமரைக்காக உருவாகும் பிரம்மாண்ட வீடு! குடிசை வீட்டின் தற்போதைய நிலை என்ன?
பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலே மிகவும் பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது.
அதன் ஒளிபரப்பு வரும் செப்டம்பர் 4ம் தேதி விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. இதன் ப்ரோமோக்கள் தற்போது வெளியாகி நிகழ்ச்சியை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தினை தூண்டி வருகின்றது.
இந்த நிலையில் பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலேவில் தனது கணவருடன் நடனமாடிய தாமரைச் செல்வி தனக்கு மக்கள் பணத்தில் வீடு கட்டிக்கொடுத்தது குறித்து உருக்கமாக பேசியுள்ளார்.

பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்ததால் குடிசை வீட்டுக்கு காசு போட்டு ரசிகர்கள் பிரம்மாண்டமாக வீடு கட்டி கொடுக்கின்றார்கள்.
எனக்கு படிப்பை பற்றி தெரியாது. ஆனால் ஒரு 10 பேரையாவது படிக்க வைக்க ஆசையாக உள்ளது என்று கூறியுள்ளார்.
இதனை பார்த்து ரம்யா கிருஷ்ணன் கண் கலங்கி விட்டார். இது குறித்த ப்ரோமோ காட்சிகள் வைரலாகி வருகின்றது.