கன்னத்தில் அறைந்த பாவனி! எதிர்பாராத ட்விஸ்ட்...சேட்டை செய்து பரிதாபநிலையில் சிக்கிய அமீர்!
சேட்டை செய்து பாவனியிடம் அமிர் அடி வாங்கிய ப்ரோமோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர்கள் அமீர் மற்றும் பாவனி.
பிக்பாஸில் இவர்கள் இருவரும் நெருக்கமாக பழகியதை தொடர்ந்து தற்போது பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் நடனமாடி வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியின் இந்த வார ப்ரோமோவில் ராஜு மற்றும் அபிஷேக் இருவரும், குணா படத்தின் கண்மணி அன்போடு காதலன் பாடல் காட்சியை ரீ- கிரியேட் செய்து காமெடி செய்து கொண்டிருந்தனர்.
அப்போது இந்தப் பாடலுக்கு ஏற்றார் போல் பாவனியிடம் அமீர் ரியாக்சன் கொடுக்க, பாவனி திருப்பி அமீரை செல்லமாக கன்னத்தில் அறைந்து விட்டார்.
பார்ப்பதற்கு க்யூட்டாக இருக்கும் இந்த ப்ரோமோ ரசிகர்களிடையே வைரல் ஆகி வருகிறது.